இன்றைய ராசி பலன்(27-03-2025)
மேஷம்:
உங்கள் வியாபாரத்தில் இன்று சில தடைகளை சந்திக்கலாம். ஒரு சிலருக்கு மனதில் சில குழப்பங்கள் தோன்றும். முடிந்த அளவு வீண் செலவுகள் செய்வதை தவிர்க்கவேண்டும்.
ரிஷபம்:
மனதில் சிறு சிறு சங்கடம் தோன்றினாலும் மதியம் மேல் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். சிலருக்கு திருமண பேச்சுக்கள் மன மகிழ்ச்சியை கொடுக்கும். அதிர்ஷ்டமான நாள்.
மிதுனம்:
நீங்கள் எதிர்பார்த்த பணவரவு வருவதற்கு தடங்கல் உண்டாகலாம். வேலை பளுவால் மன அழுத்தம் உண்டாகலாம். இறைவழிபாட்டில் பங்குகொள்வீர்கள். எதிரிகள் விலகி செல்வார்கள்.
கடகம்:
எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருக்கடிக்கு ஆளாவீர். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
சிம்மம்:
நண்பர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உணவு எடுத்துக்கொள்வதில்லை கவனமாகா இருக்கவேண்டும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
கன்னி:
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம்:
எதையும் போராடி வெற்றி பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். உழைப்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் சந்தித்த தடைகள் விலகும்.
விருச்சிகம்:
தாய்வழி உறவினருடன் பேசும் போது சங்கடம் தோன்றும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது. எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
தனுசு:
வீட்டில் சந்தோஷமான செய்திகள் வரும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள்.
மகரம்:
தடைபட்ட வருவாய் மீண்டும் வரும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.
கும்பம்:
மனதை அலைபாயவிடாமல் வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
மீனம்:
மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |