Marriage horocope: டிசம்பர் மாதத்தில் திருமண யோகம் பெறப் போகும் ராசிகள் யார்?
டிசம்பர் மாதத்தில் நடக்க இருக்கக்கூடிய கிரக மாற்றங்களால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு திருமண யோகம் கைகூட வரப்போகிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது சுக்கிரன் குரு மற்றும் சனி பகவானுடைய சஞ்சாரம் ஒரு சில ராசிகளுக்கு திருமண தடைகளை நீக்கி சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகளை கொடுக்கப் போகிறது என்று சொல்லப்படுகிறது.
யாருக்கெல்லாம் வருகிறது திருமண யோகம் ?
ஜோதிட நம்பிக்கையை அடிப்படையில் திருமண யோகம், குரு பார்வை, சுக்கிரன் பலம், ஏழாம் இடம், ஏழாம் அதிபதி, களத்திர ஸ்தானம் என பல்வேறு ஜோதிட அமைப்புகளால் டிசம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் திருமண உறவை நோக்கி செல்வதற்கான அமைப்பை கொடுக்கப் போகிறது.

மேலும், ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடியது ஏழாம் பாவமாக இருக்கிறது. லக்னத்திற்கு ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தானத்தின் அதிபதி அதன் மீது விழக்கூடிய கிரக பார்வைகள் சுக்கிரனுடைய நிலை, குரு பகவானின் அனுக்கிரகம் ஆகியவை திருமண யோகத்தை ஆராய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் குரு பகவானின் உடைய நிலையும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நிலையையும் பாரம்பரிய ஜோதிடத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியின் பலம் சப்தம பாவம், நவாம்ச கட்டம், சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், தற்போது டிசம்பர் மாதத்தில் திருமண யோகம் பெறக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம் – ஏழாம் இடத்தில் சுக்கிரன்:
இந்த காலகட்டம் இவர்களுக்கு திருமண பேச்சு கைக்கூடி வரப்போகிறது. ராசிக்கு ஏழாம் இடமான துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் என்பது களத்திரக்காரர்கர். இவர்தான் காதல், அன்பு திருமண வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார்.
அதுவும் சுக்கிரன் ஏழாம் இடத்தில் அவருடைய சொந்த ராசியில் அமைந்திருப்பது நீண்ட நாட்கள் வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். காதலித்து திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கும் பெற்றோர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் – காதல் திருமணத்திற்கு பச்சைக்கொடி:
மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவர்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது இவர்களுக்கு காதல், புதிய உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அமைப்பாகும்.
மேலும், ஐந்தாம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் மட்டுமல்லாமல் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த உறவு, காதல் திருமணமாம் ஆகியவற்றையும் குறிக்கும். ஆகையால், இந்த காலகட்டம் நல்லவரன், காதலில் வெற்றி ஆகியவை பெறுவீர்கள். இவர்களுக்கு இந்த காலகட்டம் தகவல் தொடர்பு அறிமுகங்கள் வழியாக திருமண வரன்கள் அமையலாம்.
துலாம் – சுக்கிரன் சொந்த வீட்டில்:
துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகவே இருக்கிறது. காரணம் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் அவருடைய சொந்த ராசியிலே மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். சுக்கிரனுடைய ஆட்சி பலம் காரணமாக காதல், திருமணம், குடும்ப உறவுகள் போன்ற விஷயங்களில் இவர்களுக்கு சாதகமான நிலை உருவாகலாம்.
நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வரன் அமையும். ஏற்கனவே திருமண பேச்சு துவங்கி பாதையில் நின்று இருந்தாலும் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமண வயதை தாண்டி சரியான வரை வரன் அமையவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |