இன்றைய ராசி பலன்(17-05-2025)
மேஷம்:
இன்று முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதில் சிரமங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் பதட்டமும் குழப்பமும் உண்டாகும். தாய் வழி உறவால் சில சங்கடங்கள் தோன்றி மறையும். வெளியூர் பயணம் செல்பவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்:
இன்று வாழ்க்கையில் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். வாழ்க்கை துணையால் நம்பிக்கை உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை பெரும். நன்மையான நாள்.
கடகம்:
நீங்கள் நினைத்தது நடக்கும். மனதில் தெளிவு பிறக்கும். எதிரி தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
சிம்மம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலகும். பிள்ளைகள் வழியே உங்களுக்கு நற்பலன்கள் வந்து சேரும். நினைத்ததை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
கன்னி:
இன்று படிப்பு தொடர்பான விஷயங்களில் நாட்டம் செல்லும். வெளியூர் பயணம் உங்களுக்கு எதிராக அமைய வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பளு அதிகமாகும்.
துலாம்:
வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். துணிச்சலுடன் செயல்பட்டு எதையும் சாதிப்பீர்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
விருச்சிகம்:
வேலைபளு அதிகரிக்கும். வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.
தனுசு:
இன்று நிதானமாக செயல்படுவதால் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மனதில் உள்ள குழப்பங்கள் தோன்றி மறையும்.
மகரம்:
பணிபுரியும் இடத்தில் பிரச்னை தேடிவரும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும். அலைச்சலும் செலவும் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
கும்பம்:
நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.
மீனம்:
இன்று பிறர் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மை வழங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்ற பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நஷ்டத்தை சரி செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |