வெகு விமர்சையாக நடைபெறும் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

By Fathima Apr 21, 2024 02:39 AM GMT
Report

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

உலகப் பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.

10 நாட்கள் விழாவில் நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் மாசி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.

வெகு விமர்சையாக நடைபெறும் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் | Meenakshi Sundareswarar Marriage In Tamil

திருக்கல்யாணத்திற்காக கோயில் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இதனை நேரடியாக பார்க்க 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் பாரிய எல்இடி திரைகள் மூலம் திருமண நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வெகு விமர்சையாக நடைபெறும் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் | Meenakshi Sundareswarar Marriage In Tamil


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US