மன கவலைகள் தீர சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்
உலகில் சந்தோஷமாக உலாவரும் ஒவ்வொரு மனிதர்களுக்கு பின்னாலும் சொல்லமுடியாத சோகமும் துயரமும் இருக்கிறது.அந்த சோகத்தை ஒரு பொழுதும் மனிதர்களை நம்பி பகிர்ந்து கொள்ளமுடிவதில்லை.சூழ்நிலை மாறினால் அதை கொண்டே நம்மை கேலி செய்து இன்னும் மனதை புண் படுத்துவார்கள்.
ஆக,வாழ்க்கை என்றால் ஆயிரம் கஷ்டம் இருக்கும் என்பது இயறக்கை நியதி ஆகி போனது.அதை எப்படி கடந்து முன்னேறுவது என்பது தான் இறைவன் நமக்கு கொடுத்த பணி. உதரணமாக,எத்தனை பெரிய போர் வீரன் அல்லது சாதரண மனிதனை எடுத்து கொண்டாலும் அவர்களின் இறுதி முடிவு மரணம் தான்.
ஆக பூமியில் எதுவும் நிரந்தரமானவை அல்ல.அதில் நாம் போராடி மனக்கவலைகளுக்கு ஆளாகுவதில் எந்த ஒரு பயனும் இல்லை.ஆதலால் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்து இறைவனை சரண் அடைந்தால் எல்லாம் மாறும்.உலகத்தின் உண்மை புரிய வரும்.
அப்படியாக,கலியுக வரதன் முருகன் அவனின் அடியார்களை ஒரு பொழுதும் துயரில் பார்க்க விரும்பாதவன்.கவலையில் நாம் அவனை நினைக்காவிட்டாலும் முருகன் அவன் பக்தனுக்காக ஓடி வருவான்.
ஆக அளவு கடந்த துன்பம்,உதவ கரங்கள் இல்லையே?என்று வருந்துவதை காட்டிலும் முருகப்பெருமானின் இந்த சக்தி வாய்ந்த மந்திரம் சொல்லி வர,உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகும்.அவமானம்,துரோகம்,கவலை எல்லாம் தூசியாகி போகும்.உங்களுக்கு தீராத மன வலி உண்டாகும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லுங்கள் மனம் தெளிவடையும்.
மந்திரம்:
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
பொருள்:
அதாவது எத்தனை கொடிய நாட்களும் அடியேனை என்ன செய்திடும்.வருகின்ற வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |