உங்கள் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் விலக நாக வழிபாடு செய்து பாருங்கள்
வாழ்க்கையில் சிக்கல்களும் துன்பங்களும் வருவது இயல்பு என்றாலும் ஒரு சிலருக்கு எந்த விஷயங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் பெரும் அளவில் தடைகளை சந்திப்பார்கள். இவ்வாறு சந்திப்பவர்களுக்கு சமயங்களில் ஜாதகமும் காரணமாக இருக்கலாம்.
அதாவது, ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் முதலில் தொடங்கும் வேலையில் தடையும் தடங்கலும் சந்தித்து, பிறகு அவர்கள் அதை பல முயற்சி செய்யும் பொழுது அதில் வெற்றி காண முடியும். அப்படியாக, இவ்வாறு சிக்கலை சந்திப்பவர்கள் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, நாம் நாக வழிபாடு செய்யும் பொழுது நமக்கு பெரும் ஆபத்துகள் வராமல் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துள்ளது. மேலும், நாகங்களை கௌரவித்து வழிபடுவதற்காக கொண்டாடப்படும் உற்சவமே நாக பஞ்சமி ஆகும்.
ஆடி மாத வளர்பிறை பஞ்சமியன்று இது கொண்டாடப்படுகிறது. இன்னும் முக்கியமாக நாக வழிபாட்டிற்கு நாம் மனதில் நாகத்தை நினைத்து மனம் உருகி வழிபாடு செய்ய தொடங்கினாலே நம் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை காணாலாம்.
அவ்வளவு சக்தி இந்த வழிபாட்டிற்கு உண்டு. உங்கள் வாழ்க்கையில் தீராத சிக்கல் மற்றும் பிரச்னைகளை சந்தித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் முதலில் செய்யவேண்டியது நாக வழிபாடு தான்.
இந்த வழிபாடு நம்மை எதிரிகள் தொல்லையில் இருந்து காக்கவும், நம்மை அவதூறு செய்பவர்களிடம் இருந்து காக்கவும், வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும், அடைய உதவியாக இருக்கிறது. அதோடு, விஷ பூச்சிகளால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து இவை நம்மை காக்கிறது.
அதோடு, இந்தியாவில் பாம்பையே மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் ஆகும். நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும்நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
இந்த கோயிலை மையமாகக் கொண்டு தான் நாகர்கோயில் என்ற பெயர் வந்தாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள் மற்றும் வாழ்க்கையில் தொடர் தடைகளை சந்திப்பவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்து வர நல்ல பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







