இந்த தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருமாம்

By Sakthi Raj Jul 25, 2025 11:40 AM GMT
Report

  எண் கணிதப்படி ஒருவர் பிறந்த தேதியை வைத்து அந்த நபரின் குணங்கள் மற்றும் எதிர்காலம் பற்றி கணித்து விடலாம். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்யும் பொழுது அவர்களுக்கு அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிலைத்து இருக்குமாம். அப்படியாக, எந்த தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பார்ப்போம்.

இந்த தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருமாம் | Numerology Marriage Prediction In Tamil

5 ஆம் தேதி:

இந்த தேதியில் பிறந்த பெண்கள் மிகவும் புத்திசாலியாகவும், எதையும் முனைப்போடு சாதிக்கும் திறனும் கொண்டும் இருப்பார்கள். இவர்கள் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு அதற்காக உழைக்கும் திறன் கொண்டவர்கள். இந்த தேதியில் பிறந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்யும் பொழுது தொழில் ரீதியாகவும் அவர்கள் நல்ல வளர்ச்சி அடைகிறார்கள்.

14 ஆம் தேதி:

இந்த தேதியில் பிறந்த பெண்கள் கணவரின் வளர்ச்சிக்காக முழு ஆதரவையும் கொடுக்கக்கூடியவர்கள். இவர்கள் தன்னை தாண்டி குடும்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் கணவரின் சமூக அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவை உயர முக்கிய காரணமாக அமைகிறார்கள். குடும்பத்தில் உண்டாகும் சிக்கலான சவால்களை எளிதாக சமாளிக்கும் திறமை படைத்தவர்கள்.

தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் 108 போற்றி மந்திரங்கள்

தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் 108 போற்றி மந்திரங்கள்

23 ஆம் தேதி:

இந்த தேதியில் பிறந்த பெண்களுக்கு எப்பொழுதும் அறிவாற்றல் அதிக அளவில் இருப்பதை காணலாம். கணவனின் முழு வளர்ச்சிக்கும் இவர்களால் முடிந்த பங்களிப்பை கொடுப்பார்கள். இவர்களுடைய பேச்சும், திறமையும் குடும்ப உறுப்பினருக்கு முன்னேற்றம் அடைய நல்ல வழிகாட்டுதலாக அமையும்.

6 ஆம் தேதி:

இந்த தேதியில் பிறந்த பெண்கள் சுக்கிரனின் அம்சம் அதிகம் நிறைந்தவர்கள். இந்த பெண்ணை திருமணம் செய்யும் வீடுகளில் மகிழ்ச்சியும் செல்வாக்கும் படிப்படியாக உயர்வதை காணலாம். கணவர் செய்யும் தொழிலுக்கு இவர்கள் மிக பெரிய அளவில் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பார்கள். இவர்கள் தங்களின் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US