சனிபகவானின் குரு யார் தெரியுமா?
பயம் நீங்க பைரவர் வழிபாடு என்பது அனைவரும் அறிந்தது.அதிலும் வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால்,நிம்மதியான மன அமைதியோடு வளமான வாழ்க்கை அமையும்.அதுவும் இன்றைய நாள், சனிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதியானது வந்திருப்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால், நமக்கு சனியால் உண்டாகும் பாதிப்பும் தோஷமும் விலகும்.
காரணம் சனி பகவானுக்கு, குருவாக திகழ்வர் காலபைரவர்.ஆதலால் இந்த நாள் கட்டாயம் நாம் மறக்காமல் காலபைரவர் வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கைக்கு சிறப்பானதாக அமையும்.அப்படியாக நாம் இப்பொழுது வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
இன்றைய தினம் நமக்கு பிடித்த சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது அவசியம்.அதோடு சிவபெருமானுக்கு உரிய வில்வ இலைகளை வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து நல்ல பாக்கியத்தை வழங்கும்.
பிறகு சிவன் கோவிலை வலம் வந்து இறுதியாக கால பைரவரை வழிபாடு செய்யும்போது, அவருக்கு பிரத்தியேகமாக இன்று எள் தீபம் ஏற்ற வேண்டும். சனிபகவானுக்கு தான் இந்த எள் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைய தினம் பைரவருக்கு எள் தீபம் ஏற்றி நம்முடைய வேண்டுதலை வைத்தால், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த எள் தீபம் ஏற்ற சின்ன வெள்ளை நிற துணியில் சிறிது எள் போட்டு கட்டி தயார் செய்து எடுத்துக் கொண்டு பைரவர் சன்னிதானத்தில் 2 மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்திருக்கும் இந்த முடிச்சை போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும்.
இந்த விளக்கு ஏற்றிய பிறகு மனதார காலபைரவரை வேண்டுகொள்ளுங்கள்.சனிபகவானால் உண்டாகும் வாழ்க்கை தடங்கல் இந்த சனிக்கிழமை எள் தீபம் ஏற்றுவதால் படிப்படியாக குறித்து வளமான வாழ்க்கை கிடைக்கும்.
மேலும் இவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சனிபகவனில் தடை ஏற்படாது. ஏனென்றால் சனிபகவானுக்கு குருவாகத் திகழும் கால பைரவரை நீங்கள் வணங்கும்போது,சனி பகவான் நம்முடைய துன்பத்தை படி படியாக குறைப்பார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |