உங்களைச் சுற்றி நடப்பதை முன்கூட்டியே உணர்கிறீர்களா? இதுதான் ஆன்மிக ரகசியம்
நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்களால் ஒருவரை எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதாவது ஒருவர் தான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னாலும் அந்த நபர் எந்த மாதிரியான பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த நபரால் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
அதாவது இந்த நபர் எல்லோருடைய முக பாவனைகளையும், குரலையும், அவர்களுக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் நுணுக்கமாக கவனிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் ஒருவர் வெளிப்படையாக சொல்லாத உணர்வுகளையும் விஷயங்களையும் கூட இவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல், ஒரு சிலரிடம் நாம் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு திரும்பும் பொழுது அல்லது அதை கடந்து செல்ல நினைக்கும் பொழுது நம்முடைய மனமானது மிகவும் சோர்வடைந்து விடும்.

அவர்களிடம் பேசிய பிறகு நாம் சற்று அமைதியாக ஒரு இடத்தில் இருந்து தனியாக நேரம் செலவிட வேண்டும் என்பது போல் நமக்கு தோன்றும்.
இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? அப்படி என்றால் நீங்கள் மற்றவர்களுடைய உணர்வுகளை அதிகமாக கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவருடைய உணர்வுகளை அவர்கள் சொல்லாமல் உங்களால் உணர முடிகிறது என்பதே ஆகும்.
ஒரு சிலர் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அல்லது ஒரு நபரிடம் பேசும் பொழுது அங்கு நடக்கக்கூடிய விஷயங்களை அவர்களால் யாரும் எதுவும் பகிர்ந்து கொள்ளாமலே உணர முடியும். அந்த இடத்தில் ஏதோ பதற்ற நிலை இருக்கிறது, அல்லது அந்த இடத்தில் ஏதோ எதிர்மறையான ஆற்றல் நிறைந்திருக்கிறது என்பதை உணரலாம்.
இதற்கு காரணம் நீங்கள் உங்களை மிகவும் ஆழமாக எப்பொழுதும் தேடிக் கொண்டே இருக்கிறீர்கள். இந்த உலகத்தின் மீது இருக்கக்கூடிய தேடுதல் உங்களுக்கு அதிகமாக இருப்பதால் உங்களை அறியாமல் இந்த உலகத்தையும் உயிரையும் நீங்கள் நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆதலால், நீங்கள் யாரும் உங்களிடம் வந்து எதுவும் பேசுவதற்கு முன்பாகவே நீங்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய அந்த பக்குவமும் அனுபவமும் உங்களுக்கு காலப்போக்கில் கிடைக்கிறது.
இவ்வாறான நபர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய ஒரு சில விஷயங்களையும் முன்பாகவே தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
இவ்வாறான மனிதர்களுக்கு ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது ஒரு பக்கம் என்றாலும் இவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருப்பதால் இதுவே இவர்களுக்கு சில சமயங்களில் சிக்கல்களாகவே அமைகிறது.
ஆதலால், அதனையும் அவர்கள் சரி செய்து கொள்வதற்கு தொடர்ந்து தியானமும் ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சியை எடுத்துக் கொள்வது அவசியம், இல்லை என்றால் இவர்களும் மனப்போராட்டத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |