சுக்கிரன் பயணத்தால் கோடீஸ்வர யோகம் பெற போகும் அந்த மூன்று ராசிகள்

By Sakthi Raj Jul 09, 2024 12:30 PM GMT
Report

சுக்கிரன் இந்த மாதத்தில் கடக ராசியில் பயணம் செய்ய் உள்ளார். இவருடைய கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது.

பொதுவாக நவகிரங்களில் சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு முக்கிய அம்சமாக விளங்கக்கூடியவர். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

ஒரு ராசியிலிருந்து ஒரு ராசிக்கு சுக்கிரன் மாறும்பொழுது அது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.அவை எந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் பயணத்தால் கோடீஸ்வர யோகம் பெற போகும் அந்த மூன்று ராசிகள் | Sukkiran Bagavan Yogam Nanmaigal Horoscope

கடக ராசி

கடக ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் கடக ராசி நேயர்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழிலை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.திருமண வரன் தேடுபவர்ளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள்.

விருதுநகரில் 800 ஆண்டு பழைமை வாய்ந்த சாமுண்டி சிற்பம் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு

விருதுநகரில் 800 ஆண்டு பழைமை வாய்ந்த சாமுண்டி சிற்பம் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு


துலாம் ராசி

துலாம் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் துலாம் ராசி அன்பர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாகஅமையும் .

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் தங்களுடைய பேச்சுத் திறமையால் எடுக்கும் காரியங்களை சாதித்து கொள்வார்கள்.வேலை செய்யும் இடத்தில நல்ல பெயர் உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US