மிதுன ராசியில் பெர்ச்சியாகும் சூரியபகவான் : தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

By Vinoja Jun 09, 2026 05:21 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். எனவே, சூரியனின் ராசி மாற்றங்கள் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

2026 ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். கிரகங்களின் இளவரசரான புதன் ஆட்சி செய்யும் மிதுன ராசியில் சூரியன் நுழைவதால், தகவல் தொடர்பு, கல்வி, உறவுகள், வணிக வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பாடு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆற்றல் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசியில் பெர்ச்சியாகும் சூரியபகவான் : தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Transit In Gemini These 3 Zodics Get Luck

சூரியனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில், கல்வி மற்றும் நிதிநிலை போன்ற துறைகளில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ள டாப் 3 ராசிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசியில் பெர்ச்சியாகும் சூரியபகவான் : தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Transit In Gemini These 3 Zodics Get Luck

சூரியன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும். சூரியனின் அருளால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் மீண்டும் வேகம் பெறும் வாய்ப்பு உள்ளது.

கடின உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைப்பதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.

மேலும், புதிய வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரக்கூடும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதை தெளிவடையும்.

துலாம்

மிதுன ராசியில் பெர்ச்சியாகும் சூரியபகவான் : தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Transit In Gemini These 3 Zodics Get Luck

சூரியனின் இந்த ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், மதிப்பும் மரியாதையும் உயரும். தங்களின் முயற்சி மற்றும் திறமையால் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள்.

மேலும், வாழ்க்கைத்துணையுடன் உள்ள உறவு வலுப்பெற்று, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்.

கும்பம்

மிதுன ராசியில் பெர்ச்சியாகும் சூரியபகவான் : தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Transit In Gemini These 3 Zodics Get Luck

சூரியன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும். இதன் காரணமாக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் அதிர்ஷ்டம் துணைநின்று வெற்றியைத் தேடித்தரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக தீர்ந்து மனநிம்மதி கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், பல்வேறு பணிகளை உற்சாகத்துடனும் திறமையுடனும் நிறைவேற்றும் ஆற்றல் அதிகரிக்கும். நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்பு உருவாகும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US