அட்சய திருதியை அன்று மறந்தும் இந்த பொருட்களை மட்டும் வாங்காதீர்கள்

By Sakthi Raj Apr 20, 2025 09:54 AM GMT
Report

 இந்து மதத்தில் அட்சய திருதியை என்பது மிகவும் அதிர்ஷ்டமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் எந்த ஒரு காரியம் செய்தாலும் அது பல மடங்கு பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இந்த நாளில் நாம் எந்த பொருட்களை வாங்குகின்றமோ அது மென்மேலும் வளரும்.

பெரும்பாலான நபர்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியையும் குபேரனையும் வழிபாடு செய்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி சேர்ப்பார்கள். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது.

இந்த நாட்களில் எப்படி ஒரு சில பொருட்களை வாங்குவதால் செல்வமும் செழிப்பும் உருவாகிறதோ, அதே போல் இந்த நாட்களில் சில பொருட்களை வாங்கினால் நாம் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

அட்சய திருதியை அன்று மறந்தும் இந்த பொருட்களை மட்டும் வாங்காதீர்கள் | Things We Shouldnt Buy On Akshya Tritiya Festival

1. அதிர்ஷ்டம் பொங்கும் அட்சய திருதியை நாளில் மறந்தும் கருப்பு நிற பொருட்களை வாங்க கூடாது. அவ்வாறு வாங்கும் பொழுது நம்மை எதிர்மறை ஆற்றல் பாதிக்கிறது என்கிறார்கள். மேலும், செல்வ இழப்புகள் உண்டாகும்.

2. அட்சய திருதியை நாளில் வீட்டிற்கு தேவையான எந்த ஒரு கூர்மையான பொருட்களையும் வாங்க கூடாது. அவ்வாறு வாங்கும் பொழுது நாம் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்கிறார்கள்.

ஏமாற்றத்தால் அவதி படுபவர்கள் ஒரு முறை சென்று வழிபட வேண்டிய ஆலயம்

ஏமாற்றத்தால் அவதி படுபவர்கள் ஒரு முறை சென்று வழிபட வேண்டிய ஆலயம்

3. அட்சய திருதியை நாளில் நாம் வீட்டிற்கு முற்கள் நிறைந்த செடிகள் அல்லது மரம் வாங்கி வரும் பொழுது அது நம் வீட்டிற்கு வாஸ்து குறைப்பாட்டை உண்டு செய்கிறது. அதோடு எதிர்மறை சக்திகளை பெறுக செய்கிறது.

4. அட்சய திருதியை நாளில் இரும்பு போன்ற உலோக பொருட்களை வாங்குவது தவறு என்கிறார்கள். இவை நம் வீட்டிற்கு ஆபத்துகளையும் சிக்கல்களையும் உண்டு செய்கிறது. அதாவது வீட்டின் நிம்மதியை இழக்க செய்து விடும் என்கிறார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US