திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

By Sakthi Raj Nov 02, 2026 10:47 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கிறார்கள். அந்த வகையில், திருவிழா காலங்கள் என்றால் இன்னும் கூடுதலான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றைய முன் தினம் 74 ஆயிரத்து 239 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இதில் 28,313 பக்தர்கள் அவர்களுடைய தலைமுடியை காணிக்கையாக செலுத்திருக்கிறார்கள்.

அன்றைய ஒரு நாள் மட்டும் இந்தியாவில் காணிக்கையாக ரூபாய் மூன்று கோடியே 76 லட்சம் கிடைத்திருக்கிறது. அதோடு, அன்றைய தினம் கோவிலில் 3 லட்சத்து 89 ஆயிரம் லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Tirupati Temple One Day Donation Collection

2027-ல் இயற்கை சீற்றத்தால் வர இருக்கும் ஆபத்து.. பஞ்சாங்கம் சொல்வது என்ன?

2027-ல் இயற்கை சீற்றத்தால் வர இருக்கும் ஆபத்து.. பஞ்சாங்கம் சொல்வது என்ன?

சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அதோடு அஸ்வினி மருத்துவமனையில் 20,708 பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. மேலும், நேற்றைய நிலவரம் அடிப்படையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் செல் உள்ள 19 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி இருந்தனர்.

இதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் இல்லாமல் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் ஆறு மணி முதல் எட்டு மணி நேரம் ஆனதாக அங்கு இருக்கக்கூடிய கோவில் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US