நாளைய ராசிபலன் (04-06-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு தேவை இல்லாத கோபம் பதட்டம் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முழு அக்கறை செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லை வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்:

வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது அவசியம். ஒரு சிலருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்:

இன்று தாய் மாமன் உறவால் சில சங்கடம் உண்டாகலாம். தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:

சுற்றியுள்ள நண்பர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். யாரிடமும் தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்:

அரசு விஷயங்களில் இன்று முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் நல்ல முடிவைத் தரும். இருப்பினும் பொருளாதாரத்தில் சில சிக்கனம் கடைபிடிப்பது நல்லது.

கன்னி:

குடும்பத்தில் உங்களுடைய திருமண பேச்சுக்கான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் ரீதியாக வெளியூர் செல்லக்கூடிய நிலை வரலாம். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

துலாம்:

உங்களை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய நாள். நீண்ட நாட்கள் பிரிந்து சென்ற உறவு உங்களிடம் வந்து பேசுவார்கள். வேலையில் பதவி உயர்வு உண்டு. கடன் சுமை குறையும்.

விருச்சிகம்:

குழந்தைகளின் நலனுக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திருமண உறவுகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.

தனுசு:

பிள்ளைகள் உங்களுக்கு முழு ஆதரவை தருவார்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த செய்திகள் வந்து சேரும். நன்மையான நாள்.

மகரம்:

உங்களுடைய காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தொழில் ரீதியாக ஒரு சிலருக்கு இடம் மாற்றம் நினைத்தது போல் நடக்கும். நீண்ட நாள் நினைத்த பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்:

நண்பர்களுடன் சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலர் குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு மேற்கொள்வார்கள். சேமிப்பு பற்றிய சிந்தனை உண்டாகும்.

மீனம்:

உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US