இன்றைய ராசி பலன்(07-07-2025)
மேஷம்:
இவர்களுக்கு நாளை மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வண்டி வாகனம் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
ரிஷபம்:
திருமண வாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையில் உங்கள் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
மிதுனம்:
குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் சில நஷ்டங்களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
கன்னி:
உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நன்மையான நாள்.
துலாம்:
இன்று சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் வாய்ப்புகளும் கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் சமாதானமாக செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
விருச்சிகம்:
உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். காணாமல் போன பொருள் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் மனம் சோர்வு அடையும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். கவனம் தேவை.
தனுசு:
இன்று குடும்பத்தில் சில உறவுகளால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு மதியம் மேல் கண் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.
மகரம்:
வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர். நன்மையான நாள்.
கும்பம்:
நினைத்ததை சாதிக்கும்நாள். பெரியவர்களின் ஆதரவால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்ப்புகளை மீறி சாதனை செய்யும் நாள்.
மீனம்:
இன்று சில எதிர்ப்புகளால் சில விஷயங்கள் தட்டி போகலாம். முடிந்த வரை புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சந்திக்கும் சண்டைகளால் மன கஷ்டம் உண்டாகலாம். இறைவழிபாடு அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |