அனுமனை வழிபாடு செய்வதால் அதிர்ஷ்டம் பெரும் 5 ராசிகள்

By Sakthi Raj May 14, 2025 05:46 AM GMT
Report

 வெற்றிக்குரிய தெய்வமாக அனுமன் இருக்கிறார். அனுமனை மனதார வழிபாடு செய்ய நாம் நினைத்த விஷயங்களை சாதிக்கலாம். அதோடு மன வலிமையை தரக்கூடிய சக்தி பெற்றவர் அனுமன். இவர் ஒரு மனிதனுக்கு வரும் பிரச்சனைகள் மற்றும் ஆபத்துகளில் இருந்து ஒருவரை காப்பாற்றுகிறார். அப்படியாக, அனுமனுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

ஜாதகத்தில் வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்

ஜாதகத்தில் வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்

மேஷம்:

அனுமனுக்கு மிகவும் பிடித்த 5 ராசிகளில் மேஷ ராசி முதல் இடம் பிடித்திருக்கிறது. இவர்களுக்கு அனுமனின் கருணை எப்பொழுதும் இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே மன வலிமை படைத்தவர்கள். இவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொழுது அனுமனை வழிபாடு செய்து எடுத்தால் அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் எதையும் எதிர்த்து போராடும் குணம் கொண்டவர்கள். உதவி என்று கேட்டால் அவர்கள் நிச்சயம் அதை செய்து கொடுப்பார்கள். இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு. இவர்கள் செய்யும் தொழிலில் தடை ஏற்பட்டால் சனிக்கிழமை தோறும் அனுமன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வர அவர்கள் சந்திக்கும் தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். அதனால் அனுமனுக்கு விருச்சிக ராசிக்காரர்களை மிகவும் பிடிக்கும். பொதுவாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிலும் தொடக்கத்தில் சில தடைகள் உண்டாகும். அதனால் அனுமனை இவர்கள் பற்றிக்கொள்ளும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் எல்லாம் எளிதாக நடக்கிறது. அதே போல் பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பட்டியலில் அனுமன் முதல் இடம் பிடிக்கிறார்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு அனுமன் பல நன்மைகளை செய்கிறார். இவர்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கும் ஆபத்துகளை கடக்க அனுமனை வழிபாடு செய்வதால் நல்ல மாற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக இவர்களுக்கு நஷ்டம் உண்டாகும் பொழுது சனிக்கிழமை அனுமன் ஆலயம் சென்று பூஜை செய்து வழிபாடு செய்யலாம். அது அவர்களுக்கு சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு அனுமன் தொழில் ரீதியாக அனைத்து வெற்றிகளையும் கொடுக்கிறார். ஹனுமனின் பக்தர்களை சனி தேவன் தொந்தரவு செய்ய மாட்டார். அதனால் கும்ப ராசிக்காரர்களை அனுமன் அவர்கள் சிறு வயதில் இருந்தே நல்வழி படுத்துகிறார். மேலும், கும்ப ராசிக்காரர்கள் தினமும் அதிகாலையில் குளித்து விட்டு ஹனுமன் சாலிசா படித்து வர சனியால் ஏற்படும் தோஷம் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US