கண் திருஷ்டி விலக செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்
1. நாம் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு வன்னி மரம் அல்லது வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது கஷ்டங்களை சொல்லி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். காரணம் இந்த மரங்கள் நாம் சொல்வதைக் கேட்டு நமக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக ஐதிகம்.
2. வெள்ளிக்கிழமை இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய்திபம் ஏற்றி வழிபாடு செய்தால் தம்பதிகளுக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடு விலகும்.
3. குடும்பத்தில் தொடர்ந்து மன கசப்புகள் பிரச்சனைகள் இருக்க அருகில் இருக்கக்கூடிய ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன அமைதி கிடைக்கும்.

4. கடன் தொல்லையால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபாடு செய்தால் விரைவில் கடன் பிரச்சினை தீரும்.
5. மேலும் நரசிம்மரை எந்த திருக்கோலத்தில் தரிசனம் செய்தாலும் நம்முடைய கடன் தொல்லைகள் பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி திருமண தடை ஆகியவை விலகும்.
6. இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தன காப்பு செய்து வழிபாடு செய்தாலும் தீராத கடன் தொல்லை விலகும்.
7. வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன் மனைவி இடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள் விலகும்.

8. ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் சனி பகவானின் பாதிப்புகள் குறைய திங்கட்கிழமை சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். மேலும் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னதியில் தேங்காய் உடைத்து இரண்டு விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
9. ஆலயத்தில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் குங்குமம் வைத்து எலுமிச்சை பழம் குத்தி வழிபாடு செய்தால் திருஷ்டி, செய்வினை தோஷங்கள் யாவும் விலகும்.
10. கொடுத்த கடன் வசூலாக பைரவர் சன்னதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமை நெய்திபம் ஏற்றி வழிபாடு செய்தால் விரைவில் கொடுத்த பணம் திரும்பி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |