குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 11 எளிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
நாம் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இறைவழிபாட்டின் மகிமையை கற்றுகொடுப்பது மிக மிக அவசியம். காரணம், அவர்கள் வளர்ந்து சில இன்னல்களை சந்திக்கும் பொழுது இறைவன் மீது அவர்கள் வைக்கும் நம்பிக்கை சந்திக்கும் இன்னல்களை கடந்து செல்ல உதவும்.
அப்படியாக, குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் சொல்லிக்கொடுக்க வேண்டிய எளிய 11 சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி பார்ப்போம். அதை அவர்கள் சொல்லிவருவதால் அவர்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
1. ஓம் நம சிவாய..!!
2. ஓம் கம் கணபதயே நமஹ..!!
3. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சஹ சூர்யாய நமஹ..!!
4. ஓம் நமோ பகவதே வாசுதேவாய..!!
5. ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்..!!
6. ஓம் பூர் புவ ஸ்வஹ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்..!!
7. சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா..!!
8. கரக்ரே வசதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி கரமூலே து கோவிந்தா பிரபாதே கரதர்சனம்..!!
9. ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே..!!
10. குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஷ்வர குருர் சாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ..!!
11. யா தேவி சர்வபூதேஷு வித்யா ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ..!!
மேற்கண்ட இந்த 11 எளிய மந்திரங்களை சொல்லிக்கொடுத்து வளர்ப்பதால் நம் குழந்தைகளுக்கு இறைவன் மீது ஒரு நம்பிக்கையும், வாழ்க்கையில் நமக்கும் மேல் ஒரு சக்தி இயக்கி கொண்டு இருக்கிறது என்ற புரிதலும், அதோடு மனதில் இரக்க குணமும் வளரும்.
மேலும், குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் பருவத்தில் சிறு விஷயம் கூட மிக பெரிய விஷயமாக தெரியும். அதனால் அவர்கள் மிகுந்த அச்சம் அடைய வாய்ப்புகள் உள்ளது. நாம் இவ்வாறான இறைவழிபாட்டின் சிறப்பையும், கடவுள்களின் மந்திரத்தையும் சொல்லிக்கொடுப்பதால் அவர்களுக்கு எதையும் கடக்கும் மன உறுதி பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |