12 ராசிகளின் வரமும் சாபமும் பற்றி தெரியுமா?
மேஷம்:
மேஷ ராசியினர் வரம் அவர்கள் மிகவும் துணிச்சலாக செயல்படுவார்கள். எவ்வளவு கஷ்ட காலத்திலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பார்கள். ஆனால் இவர்கள் சாபம் அவர்கள் எடுக்கும் அவசர முடிவுகள் ஆகும். சில நேரங்களில் பொறுமை இல்லாமல் சில தவறுகள் செய்து விடுவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் வரம் என்றால் அவர்களின் ஆளுமை திறன் என்றே சொல்லலாம். செய்யும் வேலையில் ஒரு நிலையான தன்மை இருக்கும். ரிஷப ராசியினர் சாபம் என்றால் அவர்களுக்கு சில விஷயங்கள் ஏற்கும் மனப்பான்மை குறைந்து இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் வரம் என்றால் அவர்களின் வசீகர பேச்சுகள் ஆகும். இவர்கள் அதிவேக சிந்தனையால் பலரையும் கவர்ந்து விடுவார்கள். ஆனால், இவர்களிடம் அதிகப்படியான கவன சிதறல் இருக்கும்.
கடகம்:
கடக ராசியின் வரமே அவர்கள் குடும்பத்தின் மீது வைக்கும் பாசம் ஆகும். பிறரிடம் மிகுந்த அன்போடு இருப்பார்கள். இவர்களுடைய சாபம் ஒருவரிடம் பழகிவிட்டால் பிடித்து விட்டால் மிகவும் உணர்ச்சி பிணைப்புகளில் சிக்கி கொள்வார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் வரம் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பிறர் வியந்து பார்க்கும் அளவு கொண்டுள்ள ஆளுமை திறன். இவர்களின் சாபம் என்றால் எப்பொழுதும் இவர்களுக்கான அங்கீகாரத்தை தேடி கொண்டு இருப்பது தான்.
கன்னி:
கன்னி ராசியின் வரம் என்றால் அவர்களின் ஆராய்ச்சி திறனும், தெளிந்த சிந்தனையும். அவர்களின் சாபம் எதையும் நம்ப மறுக்கும் தன்மை ஆகும்.
துலாம்:
துலாம் ராசியினரின் வரம் எதையும் சமநிலையோடு பார்க்கும் தன்மை ஆகும். அவர்களின் சாபம் முக்கிய முடிவுகள் என்று வந்து விட்டால் மிகவும் மிகுந்த மன குழப்பத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியின் வரம் அவர்களின் ஆழமான சிந்தனையும் மன உறுதியும். அவர்களின் சாபம் பிறர் மீது அதிக பொறாமை கொள்வார்கள். கஷ்டங்களை மனதில் வைத்து கொண்டே இருப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசியின் வரம் அவர்களின் சுதந்திர உணர்வு. அவர்களின் சாபம் ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்து சில நேரங்களில் நிறைவேற்ற முடியமால் போய்விடும்.
மகரம்:
மகர ராசியின் வரம் அவர்களின் கடின உழைப்பும் எதையும் திட்டமிட்டு செயல்படும் ஆற்றலும். அவர்களின் சாபம் வெகு விரைவில் சோர்ந்து விடுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியின் வரம் இவர்கள் எப்பொழுதும் புதுமையான சிந்தனையோடு செயல்படுவார்கள். ஆனால் இவர்கள் பிறரிடம் நெருங்கி பழக்கமாட்டார்கள். யாராக உடன் பிறந்தவர்களாகவே இருந்தாலும் சற்று விலகி நிற்பார்கள்.
மீனம்:
மீன ராசியின் வரம் இவர்கள் அதீத கற்பனை சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் சாபம், தங்களை பற்றி எப்பொழுதும் புகழ்ந்து பேசி கொண்டு இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |