12 ராசிகளும் முருகப்பெருமானை எந்த நாளில் வழிபாடு செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் வீரம், ஞானம், வெற்றி ஆகியவற்றுக்கு உரிய அற்புத தெய்வமாக இருக்கிறார். அதனால் இவரை நாம் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு பயம் விலகி நல்ல ஞானம் கிடைத்து செய்கின்ற காரியங்களில் வெற்றி பெறுகின்றோம்.
மேலும், முருகப்பெருமானை எவர் ஒருவர் முழு நம்பிக்கையோடு சரணடைந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனையை முருகன் எப்பொழுதும் கைவிடுவதில்லை.
அந்த வகையில், 12 ராசிகளும் முருகப் பெருமானை எந்த தினத்தில் என்ன நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனடியாக முருகப்பெருமான் அருள் பெற முடியும் என்பது பற்றி பார்ப்போம்.

12 ராசிக்காரர்களுக்கான முருகன் வழிபாட்டு முறை :
மேஷம்:
இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடன் தொல்லை மற்றும் தடைகள் விலக செவ்வாய் என்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு பலனை கொடுக்கும். அதோடு அவர்கள் மாதுளை பழம், நெய் தீபமேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்யும் பொழுது நல்ல மாற்றத்தை காணலாம்.
ரிஷபம்:
பொருளாதாரம் சிறப்பாக அமையவும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகவும் முருகப்பெருமானுக்கு இவர்கள் பஞ்சாமிர்தம், மல்லிகை பூ மற்றும் தயிர் சாதம் நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யும் பொழுது சிறப்பு பலனை பெறுகிறார்கள்.
மிதுனம்:
இவர்களின் மன குழப்பம் விலகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் முருகப்பெருமானுக்கு துளசி மாலை சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறப்பு பலனைக் கொடுக்கும்.
கடகம்:
இவர்கள் நிலம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் வெற்றி அடைய திங்கட்கிழமை அன்று பால் அபிஷேகம், பாயசம் படைத்து முருகப்பெருமானை வழிபட வாழ்க்கையில் உள்ள பிரச்சனை விலகும்.
சிம்மம்:
வேலையில் உயர்வு பெறவும், கடன் தொல்லை விலகவும், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கல் நெய்வேத்தியமாக படைத்தது செந்தாமரை மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் பிரச்சனைகள் விலகும்.
கன்னி:
இவர்களுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் பெறவும், தொழில் ரீதியாக சிறந்து விளங்கவும், வழக்குகளில் இவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கவும் வெள்ளைப் பூக்கள் இளநீர் மற்றும் எள் பாயாசம் படைத்து வழிபாடு செய்யலாம்.
துலாம்:
இவர்கள் கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமை நிலைக்கவும், சந்தனம் மற்றும் நறுமணம் மிக்க பூக்கள் மற்றும் கற்கண்டு படைத்து வழிபாடு செய்யலாம். இவர்கள் முருகப்பெருமானுக்கு ராஜா அலங்காரம் செய்து வழிபடுவது சிறப்பு பலனை கொடுக்கும்.
விருச்சிகம்:
இவர்களுடைய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கவும், எதிரிகள் தொல்லை விலகவும் தேன் பேரீச்சம்பழம் மற்றும் சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து வழிபாடு செய்வதால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இவர்கள் அன்னதானம் செய்தால் தடைகள் யாவும் விலகும்.
தனுசு:
இவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவும், உயர் கல்வி வாய்ப்புகள் உருவாகவும் ஆன்மீக வளர்ச்சி பெறவும் முருகப்பெருமானுக்கு 108 போற்றிகளை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.
மகரம்:
வேலையில் நிலையான தன்மை பெறவும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் அடையவும் எள் பாயாசம் படைத்துநீல நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம்:
தொழில் ரீதியாக நல்ல லாபம் பெறவும், வாழ்க்கையில் புகழும் கௌரவம் கிடைக்கவும் பஞ்சாமிர்தம் மற்றும் கதம்பமாலை சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம். அதோடு அன்னதானம் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
மீனம்:
நல்ல ஞான வளர்ச்சி பெறவும், கடன் சுமை குறையவும், தேன் மற்றும் சர்க்கரைப் பொங்கலை படைத்து வழிபாடு செய்து கந்த சஷ்டி பாராயணம் செய்யும் பொழுது நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |