2026 ஆடி அமாவாசை: அன்று கட்டாயம் செய்யக்கூடாத 15 விஷயங்கள் என்ன?

By Sakthi Raj Aug 12, 2026 07:45 AM GMT
Report

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிக முக்கியமான தினமாக இருக்கிறது. இந்த தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக உள்ளது.

அவ்வாறு செய்கின்ற பொழுது பித்ரு தோஷம், பித்ரு சாபம் விலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், ஆடி அமாவாசை அன்று கட்டாயம் செய்யக்கூடாத 15 விஷயம் என்னவென்று பார்ப்போம்.

2026 ஆடி அமாவாசை: அன்று கட்டாயம் செய்யக்கூடாத 15 விஷயங்கள் என்ன? | 15 Things We Must Not Do In Aadi Amavasya Day

2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

1. வீட்டு வாசலில் அன்றைய தினம் கட்டாயம் கோலம் போடக்கூடாது.

2. நகம் வெட்டுதல் முடிவேட்டுதல் கூடாது.

3. அசைவம் சமைக்கவோ சாப்பிடவும் கூடாது.

4. முன்னோர்கள் பூஜையில் மணி அடித்து வழிபாடு செய்ய கூடாது.

5. எள் கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.

6. வீடு பூஜை மற்றும் சமையலறை அமாவாசை அன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. தர்ப்பணத்திற்கு ராகு காலம் எமகண்டம் ஆகியவை பார்க்க தேவையில்லை.

8. படையில் போடுகின்ற பொழுது ராகு காலம் மற்றும் எமகண்டமாக இருக்கக் கூடாது.

9. இன்றைய தினம் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் கட்டாயம் வைக்க கூடாது.

10.எலுமிச்சை அறுத்து நிலை வாசலில் வைத்திருந்தால் கட்டாயம் எடுத்து விட வேண்டும்.

2026 ஆடி அமாவாசை: அன்று கட்டாயம் செய்யக்கூடாத 15 விஷயங்கள் என்ன? | 15 Things We Must Not Do In Aadi Amavasya Day

2026: ஆகஸ்ட் 11 உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. அதிர்ஷ்ட காற்று யாருக்கு?

2026: ஆகஸ்ட் 11 உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. அதிர்ஷ்ட காற்று யாருக்கு?

 

11. பூஜை அறையில் உள்ள விளக்குகளை முன்னோர்கள் வழிபாடு செய்ய கட்டாயம் ஏற்றக்கூடாது.

12. முன்னோர்கள் வழிபாடு முடியும் வரை பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது கூடாது.

13. சுமங்கலிப் பெண்களாக இருந்தால் கட்டாயமாக விரதம் இருப்பதும் தர்ப்பணம் கொடுப்பதும் கூடாது.

14. தந்தை இருக்கின்ற மகன்கள் தர்ப்பணம் செய்வது கூடாது.

15. பெண் பிள்ளைகள் பெற்றோர்களுக்காக எள் தண்ணீர் பிண்டம் கட்டாயமாக செய்யக்கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US