ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த 2 ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் 9 கிரகங்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு கிரகங்களும் தனி தன்மை கொண்டவை. ஜோதிடத்தில் நிழல் கிரகமாக பார்க்கப்படும் ராகு கேது ஒருவர் ஜாதகத்தில் எதிர்பாராத மாற்றங்களை கொடுக்கிறார். அதிலும் குறிப்பாக ராகு எப்பொழுதும் ஒரு சாதகமான கிரகமாக பார்க்கப்படுவதில்லை.
இருந்தாலும் சில ராசிகளுக்கு இந்த ராகு பகவான் எதிர்பாராத நன்மைகள் மற்றும் சிறந்த மாற்றத்தை கொடுக்கிறார். பொதுவாக, ராகு பகவான் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர்.
அதனால் அவருடைய பயணம் எல்லோருக்கும் அவ்வளவு சாதகமாக இருக்காது என்றாலும், சில ராசிகளுக்கு திடீர் பணவரவு ஆதாயம் உண்டு செய்துவிடும். அப்படியாக, ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த 2 ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
சிம்மம்:
பொதுவாக ராகு சிம்ம ராசிக்கு வரும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல தெளிவை உண்டு செய்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் மிகவும் புத்திசாலியாக வேலை செய்வார்கள். மனதில் தன்னம்பிக்கை உருவாகும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு பிறக்கும். அரசியல் அல்லது நிர்வாகம், ஊடகம் அல்லது மக்கள் தொடர்பு என எதுவாக இருந்தாலும் சிம்ம ராசியினர் மிக சிறந்த உச்சத்தை தொடுவார்கள். குறிப்பாக, ராகு மகா தசையின் போது, சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், வேலையில் சிறந்த முன்னேற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் மனதில் அதிகப்படியான ரகசியத்தை வைத்திருப்பார்கள். ராகு விருச்சிக ராசியில் இருக்கும்போது, அவர்கள் ஜோதிட துறை, ஆராய்ச்சி, அமானுஷ்ய அறிவியல், ஜோதிடம், உளவியல், தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் தோன்றும். அந்த காலகட்டத்தில் சமநிலையான உணர்வை கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் போராடி வெற்றி காண்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |