நினைத்ததை கிடைக்க செய்யும் பங்குனி உத்திரம் வழிபாடு
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படியாக அந்த மாதத்தில் தான் தெய்வங்களுடைய திருமணங்கள் மற்றும் முக்கியமான இந்து விசேஷங்கள் நடைபெறும்.
மேலும், பங்குனி மாதத்தில் மிக முக்கியமானதாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. அன்றைய தினம் நாம் நினைத்தது நடக்க இறை வழிபாடு செய்து விரதம் இருக்க எண்ணற்ற பலன்களை பெறலாம். அதை பற்றி பார்ப்போம்.
பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் தான் பங்குனி உத்திரம் ஆக கொண்டாடப்படுகிறது. மேலும், தெய்வங்களுடிய திருமணம் ஆன சிவன் பார்வதி, ராமர் சீதை, பெருமாள் மகாலட்சுமி தேவி, முருகனுக்கும் தெய்வானை இவர்களுக்கு இந்த பங்குனி உத்திரத்தில் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இந்த நாளில் நல்ல திருமணம் வரன் வேண்டி காத்திருப்பவர்கள் விரதம் இருந்து வழிபட அவர்கள் மனதிற்கு ஏற்ப நல்ல வரன் அமையும். இந்த வருடம் 2025ல் பங்குனி உத்திரம் ஏப்ரல் பத்தாம் தேதி பிற்பகல் 12 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிகிறது.
இந்த முக்கியமான நாளில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி பூஜை செய்வது நல்ல பலன் அளிக்கும். அதே போல், குடும்பத்தில் குழப்பம், பிரச்சனைகள் இருப்பவர்கள் பங்குனி உத்திர நாளில் சிவபெருமான், முருகப்பெருமானை வழிபட அவர்களின் அருளால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும்.
மேலும், பங்குனி உத்திர சுப தினத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள், தேரோட்டம் மற்றும் குறிப்பாக முருகன் கோவில், சிவன் கோவில்களில் திருக்கல்யாணம் இறைவனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெரும்.
இந்த நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைத்து முன்னேற்றம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |