2026: ஏப்ரல் 8 நடக்கும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் அடுத்த கட்டம் செல்லும் ராசிகள்

By Sakthi Raj Apr 08, 2026 07:06 AM GMT
Report

நவகிரகங்களில் சந்திர பகவான் மிகவும் வேகமாக தன்னுடைய இடத்தை மாற்றக் கூடியவர். அப்படியாக ஏப்ரல் 8 ஆம் தேதி சந்திரன் குருவின் ராசியானதனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். மேலும் குருவுடன் சிறப்பு தொடர்பை உண்டாக்கி சமசப்தக பாவத்தில் இணைந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறார். 

கூடுதலாக சந்திரனிலிருந்து நான்காம் வீட்டில் அதாவது மீன ராசியில் சூரியனும் செவ்வாயும் இணைந்து ரவியோகம் உருவாக்க இருக்கிறார்கள். ஜோதிடத்தில் அறிவு ஆற்றல் போன்றவற்றுக்கு காரணமாக இருக்கக் கூடிய புதன் பகவானுக்கு உரிய புதன்கிழமையில் கஜகேசரி யோகத்துடன் ரவியோகமும் உருவாக இருக்கிறது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீன ராசி வரை எல்லா ராசிகளுக்கும் பிரதிபலிக்கும் என்றாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அவர்களை அடுத்த கட்ட நகர்வை நோக்கி எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான மாற்றமாக இருக்கப்போகிறது. அப்படியாக எந்த ராசியினர் இந்த கஜகேசரி யோகத்தினால் மிகப்பெரிய அளவில் நன்மையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

2026: ஏப்ரல் 8 நடக்கும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் அடுத்த கட்டம் செல்லும் ராசிகள் | 2026 April Gajakesri Rajayogam Prediction

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்கம் குவிந்தே கொண்டே இருக்குமாம்

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்கம் குவிந்தே கொண்டே இருக்குமாம்

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது சிறந்த வாய்ப்புகளை தேடி கொடுக்க போகிறது. இந்த தாக்கத்தினால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வியாபாரத்தில் தடைப்பட்டு இருக்கக்கூடிய வருமானம் திடீர் என்று கைகளுக்கு வந்து சேரும்.

நீண்ட நாட்களாக ஒரு பணிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த பணி மிக விரைவில் சாதகமான நிலையில் முடிவை பெறும். வெளிநாட்டு பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு கலைத்துறையில் ஒரு மிகப்பெரிய அளவில் சாதனையை பெற்றுக் கொடுக்கப் போகிறது. காதல் வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்புகளால் நீங்கள் மிகச் சிறந்த அங்கீகாரத்தை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு பொன்னான காலமாக அமையப்போகிறது.

2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கப்போகிறது. இவர்களுடைய தனி திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். இவர்களுடைய படைப்பாற்றலுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதனை புரியக்கூடிய காலம். உயர் கல்விக்காக மாணவர்கள் அரசு உதவியுடன் சேர்ந்து ஒரு நல்ல பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாகப் போகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US