2026 ராகு பெயர்ச்சி: உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு பகவான் மிகவும் முக்கியமான நபராக இருக்கிறார். ராகு தீமையை மட்டும் செய்ய மாட்டார் அவர் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையையும் செய்யக் கூடியவராக இருக்கிறார்.
டிசம்பர் மாதம் ஜோதிடத்தில் மிக முக்கியமான ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. இதில் ராகு பகவான் டிசம்பர் 5ஆம் தேதி காலை 10:32 மணி அளவில் சனி பகவானுடைய ராசியான மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், ராகு பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் இவர்களுக்கு குடும்பத்தில் ஒரு அமைதியான சூழ்நிலையை கொடுக்கப்போகிறது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். இவர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த நற்செய்திகள் இவர்களுக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக செய்யக்கூடிய முதலீடுகள் மிகப்பெரிய அளவில் நன்மை பெற்றுக் கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகளை போக்க போகிறது. நீண்ட நாட்கள் பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். வேலைக்காக திடீர் இடம் மாற்றம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் சாதகமாக அமையும் சகோதரர் வழி தான் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.
மகரம்:
இந்த காலகட்டம் அரசாங்கத்தால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கப்போகிறது. ஒரு சிலருக்கு அரசு தேர்வுகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வேலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை நல்ல முடிவை பெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நற்செய்திகள் வரும். நட்புகள் வழியாக மகிழ்ச்சி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |