2026: ராகு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் .. யார் தெரியுமா?
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சியால் குறிப்பிட சில ராசிகளுக்கு பொற்கால ஆரம்பமாக போகிறது.
அதாவது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சியால் இவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்க போகிறது. இந்த காலகட்டம் அலுவலகத்தில் உங்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதை பற்றிய சிந்தனையும் புதிய தொழில் தொடங்குவதற்கான எல்லா வகையிலும் உங்களுக்கு உதவிகள் வந்து சேரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் இவர்களுக்கு எதிர்ப்பாராத இடங்களில் இருந்து பணவரவுகள் கிடைக்கப்போகிறது. வேலையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். அதே போல் உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் புதிய சொத்துக்கள் சேர்க்கை உருவாக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் இவர்களுக்கு சகோதரர் வழியே நல்ல ஆதரவு கிடைக்கும் மனதில் தன்னம்பிக்கையும் எதையும் எளிதில் சாதிக்கக் கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் உருவாகும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை மற்றும் சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |