2026: சனி கேதுவால் உருவாகும் நவபஞ்சம யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்?

By Sakthi Raj Nov 29, 2026 04:50 AM GMT
Report

சனி பகவான் தற்பொழுது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். அப்படியாக டிசம்பர் 5ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி வழியாக கேது கடக ராசிக்கும் ராகு மகர ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். இதன் காரணமாக சனி மற்றும் கேது கிடையே நவர்பஞ்சயோகம் உருவாக இருக்கிறது. இந்த சுபயோகத்தின் தாக்கம் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை கொடுக்கப்போகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்காகப் பலத்த பாதுகாப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்காகப் பலத்த பாதுகாப்பு

நவபஞ்சம யோகம் என்றால் என்ன:

ஜோதிடத்தில் ஒரு கிரகத்திற்கு ஐந்தாம் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகம் அமைகின்ற பொழுது அதாவது திரிகோண ஸ்தானத்தில் அமைகின்ற பொழுது 5-9 என்ற நிலையில் அந்த கிரகங்கள் அமையும்.

இதன் காரணமாக சனி கேது இடையே நவபஞ்ச யோகம் உருவாக இருக்கிறது. இது மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கக் கூடியதாக அமைகிறது. பொதுவாக, அசுப கிரகங்களால் இந்த யோகம் பெரிய அளவில் நன்மை செய்யாது என்றாலும் தற்போது சனி குருவின் மீனா ராசியிலும், கேது சந்திரனின் கடக ராசியிலும் சஞ்சரிக்க இருக்கிறார்கள்.

இங்கு இவர்களுக்கு வீடு கொடுத்த கிரகம் சுப கிரகம் என்பதால் இதனால் இவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் மற்றும் அற்புதமான யோகம் அமைய காத்திருக்கிறது.

2026: சனி கேதுவால் உருவாகும் நவபஞ்சம யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்? | 2026 December 05 Saturn Ketu Navapancham Yoga

2026: வைகுண்ட ஏகாதசி முதல் ஆருத்ரா தரிசனம் வரை: டிசம்பர் மாத ஆன்மிக விசேஷங்கள் என்ன

2026: வைகுண்ட ஏகாதசி முதல் ஆருத்ரா தரிசனம் வரை: டிசம்பர் மாத ஆன்மிக விசேஷங்கள் என்ன

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம யோகமானது மிகப்பெரிய அளவில் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. இவர்களுக்கு ராசிக்கு இரண்டில் கேது மற்றும் 10ல் சனி இருப்பதால் இந்த காலகட்டம் இவர்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடியதாக அமையப்போகிறது. கடின உழைப்பின் வழியாக நற்பலன்களை பெறுவார்கள்.

சக ஊழியர்களிடையே ஆதரவும் வேலை செய்யும் இடங்களில் உயர் பதவிக்கான வாய்ப்புகளும் தேடி வரும். சமுதாயத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சனி பகவானுடைய இந்த நகர்வால் கடந்த கால நிகழ்வுகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகமானது இவர்களுக்கு சூழ்நிலையை மிகவும் சாதகமாக கொடுக்கப் போகிறது. குறிப்பாக பொருளாதார உயர்வு இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் காணப்படும். மேலும், கேதுவின் சாதகமான அமைப்பு இவர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியதாக இருக்கப்போகிறது.

நீண்ட காலமாக நீங்கள் மனதில் நினைத்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் மனதில் இருந்த விருப்பங்கள் நிறைவேறும். மேலும், சொந்த தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காலகட்டம் கைக்கூடி வரும். சனியின் அமைப்பு இவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கப் போகிறது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலேயே சனி அமர்ந்திருப்பதால் ஐந்தில் கேது வருவது பலவிதமான நன்மை தரக்கூடியதாக இருக்கப்போகிறது. உங்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்களை பெறுவீர்கள்.

தொழில் செய்யக்கூடியவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல முன்னேற்றமாக அமையப் போகிறது. வியாபாரங்களில் லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பிலும் போட்டி தேர்விலும் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். வேலை தொடர்பாக சக ஊழியர்களிடம் ஆதரவும் உயர் அதிகாரிகளிடம் நம்பிக்கையையும் பெறுவீர்கள்.   

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US