2026 சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 8 முதல் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் பகவான் தான் ஒரு மனிதனின் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம், அழகு காதல், அன்பு ஆகியவற்றிக்கு காரணியாக உள்ளார். ஆகையால் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தாம் அந்த ஜாதகர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை எந்த ஒரு தடையின்றி அனுபவிக்க முடியும்.
அப்படியாக, சுக்கிரனின் இடமாற்றம் ஜோதிடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை 12 ராசிகளுக்கும் கொடுக்கும். அந்த வகையில் தற்பொழுது சுக்கிரன் மிதுனத்தில் உள்ளார். அவர் 2026 ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் செல்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிக பெரிய அளவில் தாக்கம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் பணத்தின் சேமிப்பை பற்றி உணர்த்தப்போகிறது. ஆதலால் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதோடு, நீண்ட நாட்களாக கைகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.
தொழில் ரீதியாக முன்னேற்றமும் அதில் இருந்த சிக்கல்கள் விலகும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளால் அதிக அளவில் லாபம் காணும் காலமாக அமையப் போகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
சிம்மம்:
இவர்களுக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக அமையப்போகிறது. இந்த காலகட்டம் சமுதாயத்தில் அதிக அளவில் பெயரும் புகழும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சிலருக்கு இந்த காலகட்டம் எதிர்பாராத அளவு பெரிய ஒப்பந்தங்களில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசிக்கு சுக்கிரனின் பெயர்ச்சி இவர்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. உங்களின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் உள்ள கஷடங்கள் விலகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மன அழுத்தம் குறையும், சிலருக்கு புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |