138 நாட்களுக்கு பிறகு வக்ரமாகும் சனி.. இனி இந்த ராசிகள் காட்டில் பணமழைதானாம்
ஜோதிடத்தில் சனிபகவான் என்றாலே தனி மரியாதையும் பயமும் இருக்கிறது. மேலும், இவர் மற்ற கிரகங்களை விடவும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருக்கிறார். அதனால் அவருடைய நகர்வுகள் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கும்.
குறிப்பாக ஒருவர் வாழ்க்கையில் சனி வக்ரம், சனி அஷ்டமம், போன்ற மாற்றங்கள் கட்டாயம் தனி நபர் வாழ்க்கையில் மிக பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்குமாம். அந்த வகையில் ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலைக்கு செல்கிறார்.
இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் வாழ்க்கையில் சில சோதனைகளை சந்தித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் இதனால் மிக பெரிய அளவில் புதிய வாய்ப்புகளையும் அதிர்ஷ்டமான சூழ்நிலையும் பெறுகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சியானது சக்தி வாய்ந்த மாற்றமாகவே இருக்கப்போகிறது. இவர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்பை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டங்களில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களையும் குடும்பத்தில் ஏற்படக்கூடிய மன ஸ்தாபங்களையும் போக்கி மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சியானது எதிரிகளை வென்று வெற்றியை நிலைநாட்ட கூடிய தன்மையை கொடுக்கப் போகிறது. மேலும் கடன் சுமைகளிலிருந்து இவர்கள் விடுபட போகிறார்கள். வேலை பளு இருந்தாலும் வேலையில் முன்னேற்றமும் அதற்குரிய அங்கீகாரமும் மதிப்பும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் நினைத்தது போல் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயிற்சியானது அவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு உகந்த காலமாகும். பொருளாதார ரீதியாக சந்தித்து வந்த சிக்கல்கள் விலகி நீண்ட நாட்கள் கைகளுக்கு வர வேண்டிய பணத்தை பெறுவீர்கள். தேவையில்லாத மன அழுத்தம் குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்புகள் உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |