உருவாகும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவர்கள்தானாம்

By Sakthi Raj Apr 30, 2026 07:22 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. மேலும், கிரக மாற்றங்களால் சில முக்கியமான யோகங்கள் உருவாகின்றன. அவ்வாறு யோகங்களில் மிகவும் சுபயோகமாக விளங்கக்கூடியது கஜகேசரி யோகம்.

சந்திரன் மற்றும் குரு இணையும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. பொதுவாக சந்திரனிலிருந்து குரு லக்னத்தில் நான்கு, ஏழு, பத்தாம் வீட்டில் இருக்கும் போது அல்லது இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் பொழுது இந்த யோகம் உருவாகுகிறது.

உருவாகும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவர்கள்தானாம் | 2026 Kajakesari Yogam Brings Luck To 6 Zodiac

இந்த 5 பொருட்கள் தானம் செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் பறந்து விடுமாம்

இந்த 5 பொருட்கள் தானம் செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் பறந்து விடுமாம்

மேலும், "கஜகேசரி" என்ற பெயருக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது "கஜ" என்றால் யானை, வலிமை மற்றும் பொறுமையை குறிக்கும் "கேசரி" என்றால் சிங்கம். இது தைரியமும் தலைமைத்துவ பண்பிற்கும் சின்னமாக இருக்கிறது. இந்த யோகம் உள்ளவர்கள் தைரியம், அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் மனதை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அதே சமயம் குருபகவான் அறிவு மற்றும் ஞானத்தை குறிக்கக் கூடியவராக இருக்கிறார். இவை இரண்டும் சேரும் பொழுது மனமும் அறியும் சமநிலை அடைந்து செயல்படுகிறது. இந்த யோகம் உள்ளவர்கள் பொதுவாக மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.

முடிவெடுப்பதிலும் சிறந்து விளங்க கூடியவர்கள். அது மட்டுமல்லாமல் சமுதாயத்தில் மரியாதையோடும் பெயரோடும் வாழக்கூடியவர்கள். எவ்வளவு பெரிய சிரமம் வந்தாலும் அதை எதிர்த்து போராடக்கூடிய தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த யோகம் இவர்களை ஒரு மிகப்பெரிய நிலைக்கு கூட்டிச் செல்லக் கூடியதாக இருக்கிறது.

உருவாகும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவர்கள்தானாம் | 2026 Kajakesari Yogam Brings Luck To 6 Zodiac

திருமணத்தில் தடையா? இந்த பரிகாரங்கள் செய்தால் விரைவில் திருமணம் நடக்குமாம்

திருமணத்தில் தடையா? இந்த பரிகாரங்கள் செய்தால் விரைவில் திருமணம் நடக்குமாம்

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு சில முக்கியமான தேதிகளில் இந்த கஜகேசரி யோகம் உருவாகுகிறது. அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த பலன் சிறப்பாக அமையும். இந்த காலகட்டங்களில் சிம்ம, தனுசு, மகரம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கக்கூடும்.

இருப்பினும், கோச்சாரத்தின் பலன்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது அவர்களுடைய ஜாதகத்தை பொறுத்து மாறுபடுகிறது. இருந்தாலும் இந்த கஜகேசரி யோகம் ஒருவருக்கு மனதிற்கும் ஞானத்திற்கும் ஒரு சம நிலையான சக்தி வாய்ந்த யோகமாக செயல்படுகிறது. இந்த யோகத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியும் எதிர்பாராத நேரத்தில் நன்மையும் உருவாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US