2026: ஆரம்பமாகும் கேது பார்வை.. டிசம்பர் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிடத்தில் 9 கிரகங்களில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியது கேது மற்றும் ராகு பகவான். இவர்கள் ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுடைய ராசியை மாற்றுகிறார். மேலும், ராகு கேது இடமாற்றம் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.
அந்த வகையில் கேது பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை ஏப்ரல் 20ஆம் தேதி மாற்ற இருக்கிறார். அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி கேது பகவான் பிற்பகல் 1.40 மணிக்கு சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார்.
இதனால் சில ராசிகளுக்கு நேர்மறையான தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை கொடுக்கிறது. அப்படியாக கேது நட்சத்திர மாற்றத்தால் யார் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த நட்சத்திர இடம் மாற்றமானது இவர்களுக்கு எதிர்மறையான ஆற்றலை கொடுக்கக்கூடும். இவர்கள் வேலை செய்யும் இடங்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதம் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அமைதியாக பேசி பழகுவது அவசியமாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த நட்சத்திர இடம் மாற்றமானது இவர்களுக்கு பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகளை கொடுக்கலாம். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பொழுது உடைமைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சனைகள் வந்து சொல்லும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த நட்சத்திர இடம் மாற்றமானது குடும்பங்களில் தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை ரீதியாக வீண் அலைச்சல் உண்டாகலாம். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |