2026: துலாம் ராசியினர் குரு பெயர்ச்சியில் ஏன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

By Sakthi Raj May 28, 2026 07:20 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அப்படியாக, குரு பகவான் உடைய அருட்பாவை ஒருவருக்கு பட்டுவிட்டால் கட்டாயம் அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும்.

அந்த வகையில் ஏழாவது ராசியான துலாம் ராசிக்கு குரு பகவான் பத்தாவது வீட்டில் இருக்கிறார். இதனால், இவர்கள் இந்த குரு பெயர்ச்சி காலகட்டங்களில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும்? செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே, ஜோதிட சாஸ்திரத்தில் 10-ஆம் இடத்தில் குரு பகவான் இருந்தால் பதவி பறிபோகும் என்கின்ற ஒரு கணக்கு இருக்கிறது. அந்த வகையில், 10 ஆம் வீட்டில் குருபகவான் இருக்கிறார் என்றால் அப்பொழுது நீங்கள் வேலை செய்யும் இடங்களில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியமாக உள்ளது.

குரு பகவானின் செல்ல பிள்ளையாக இருக்கக் கூடிய 3 ராசிகள்.. யார் தெரியுமா?

குரு பகவானின் செல்ல பிள்ளையாக இருக்கக் கூடிய 3 ராசிகள்.. யார் தெரியுமா?

சக ஊழியர்களிடம் தேவை இல்லாத பேச்சு வார்த்தைகள் மற்றும் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தினால் நல்ல நிலைக்கு செல்லலாம். அதாவது இவ்வளவு நாள் நீங்கள் வேலையின் அருமை புரியாமல் இருந்தால் இதற்குப் பிறகு நீங்கள் அந்த வேலையின் முக்கியத்துவத்தையும் அது உங்களுக்கு எவ்வளவு தூரம் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தும் நீங்கள் செயல்பட தொடங்கினால் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதைப்போல், குரு பகவான் இவர்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார் என்பதால் இதில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. பணவரவு இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு கிடைக்கும். எட்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால் தந்தை உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தந்தைக்கு தேவை இல்லாத மன அழுத்தம் வேலை பளு கொடுக்க வேண்டாம். இந்த காலகட்டங்களில் சொந்த தொழில் செய்பவர்களுக்கும் ஐடி போன்ற நிறுவனங்களில் இருப்பவர்களுக்கும் பொற்காலமாகவே அமைகிறது.

மேலும், துலாம் ராசியினர் இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஜூன் மாதம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி முழுமையாக இதை காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US