2026 சனி நட்சத்திர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்ல போகும் ராசிகள் ? யார் தெரியுமா?

Report

சனிபகவான் என்றாலே இங்கு பலரும் பயம் கொள்கிறார்கள். அதாவது சனி என்றாலே எதிர் வினையை தான் தருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் சனி பகவான் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையும் செய்கிறார் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.

சனி பகவான் வருகின்ற மார்ச் 21ஆம் தேதி அன்று அவருடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். அவர் தற்பொழுது மீன ராசியில் பெயர்ச்சி அடைந்திருக்கிறார். உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைய உள்ளார்.

இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், ஒரு சில ராசிகள் மிகப்பெரிய அளவிற்கு உச்சத்தை தொட போகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 சனி நட்சத்திர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்ல போகும் ராசிகள் ? யார் தெரியுமா? | 2026 March 21 Sani Natchathira Peyarchi Palangal

2026 ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீருமாம்

2026 ராம நவமி எப்பொழுது? இந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீருமாம்

மேஷம்:

மேஷ ராசிக்கு சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நினைத்த விஷயங்கள் கைகூடி வரப்போகிறது. நீண்ட நாட்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் கட்டாயம் அந்த காரியம் நல்ல முடிவைப் பெறும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய இந்த நட்சத்திரம் மாற்றமானது இவர்களுக்கு தொழில் ரீதியாக பணம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகள் இடத்திலிருந்து ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. குடும்பத்தினர் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அரசியல் தொடர்பு விரிவடையும் காலகட்டமாகும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல அணுகூலம் உண்டு.

நினைத்ததை முடிக்கும் சிவ மந்திரம்.. எது தெரியுமா?

நினைத்ததை முடிக்கும் சிவ மந்திரம்.. எது தெரியுமா?

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவானுடைய இந்த நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுக்கப் போகிறது. மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசாங்க தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US