உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

By Sakthi Raj Nov 12, 2026 07:54 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒருவருடைய லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும், லக்னத்தை தான் நாம் முதல் வீடாகக் கொண்டு ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொள்கின்றோம்.

அப்படியாக, ஒருவருடைய லக்னம் என்பது எவ்வளவு வலுவாக இருக்கிறதோ அவ்வளவு நன்மைகள் அந்த ஜாதகர் பெறுகிறார்கள். அப்படியாக, லக்னத்தில் அமைந்து உள்ள கிரகம் பொறுத்து அந்த நபருடைய குணாதிசயமாகவும் மாறுபடுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. லக்னத்தில் சூரியன் இருந்தால்:

இவர்கள் யார் சொல்லையும் கேட்க மாட்டார்கள். நினைத்ததை தான் செய்வார்கள். எந்த இடத்திலும் இவர்களே முதன்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இருப்பினும் கோபம் வந்தால் ஐந்து நிமிடத்தில் மறந்து விடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள் | Planets In First House Astrology Prediction

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் தான் வைத்து சட்டம் என்று பேசுவார்களாம்

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் தான் வைத்து சட்டம் என்று பேசுவார்களாம்

2. லக்னத்தில் சந்திரன் இருந்தால்:

இவர்கள் யார் அழுதாலும் அவர்களுடன் இவர்களும் அழுவதுண்டு. இரக்க குணம் கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். இருப்பினும் ஏமாந்து போகக்கூடிய தன்மையும் பெற்று இருப்பார்கள். அவ்வப்பொழுது மனக்குழப்பத்தை சந்திக்கிறார்கள்.

3. லக்னத்தில் செவ்வாய் இருந்தால்:

இவர்கள் சண்டை என்று வந்துவிட்டால் அங்கு முதலாக நின்று சண்டை போடக் கூடியவர்கள் நிலம் வண்டி வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இருப்பார்கள்.

4. லக்னத்தில் புதன் இருந்தால்:

பேச்சால் ஒருவரை கவர்ந்து விடுவார்கள். தொழில், மீடியா, பேச்சுத் துறை போன்றவற்றில் சிறந்து விளங்க கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலையை பார்க்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கணக்கில் சிறந்தவர்கள்.

5. லக்னத்தில் குரு இருந்தால்:

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். கோவில் பூஜை, பெரியவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உடனடியாக சென்று உதவ கூடியவர்கள். மரியாதை தெரிந்தவர்கள். யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்.

6. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால்:

எப்பொழுதும் அழகாக ஆடை உடுத்திக் கொள்ள விரும்புவார்கள். வாசனை திரவியம், நல்ல கார், வீடு என்று ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார்கள். காதல் என்று வந்துவிட்டால் உண்மையாக இருப்பார்கள். இருப்பினும் விரைவில் ஒரு காதலில் விழுந்த விடக்கூடிய தன்மை இருக்கும். சினிமா துறையில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள் | Planets In First House Astrology Prediction

சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம்

சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம்

7. லக்னத்தில் சனி இருந்தால்:

சிறுவயதில் அதிக அளவில் கஷ்டப்பட்டு இருப்பார்கள். இவர்களாகவே சுய முயற்சியில் முன்னேறி எல்லா கஷ்டங்களையும் சமாளித்து இருப்பார்கள்.

இவர்கள் கடினமான வேலையையும் பொறுமையாக கையாளக் கூடியவர்கள். இவர்கள் வாழ்க்கையில் முப்பது வயதிற்கு பிறகு தான் பெரிய வளர்ச்சி வருகிறது. சிலருக்கு சனி அமைந்து இருக்கும் வீடு பொறுத்து பலன் மாறுபடுகிறது.

8. லக்னத்தில் ராகு இருந்தால்:

எல்லோரையும் போல அல்லாமல் சற்று வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். வெளிநாடு ஆசை, பெரிய கார், பெரிய பணக்காரராக வேண்டும் என்ற ஒரு பெரிய கனவிருக்கும். இருப்பினும் இவர்களுக்கு திடீர் ஏற்ற இரக்கம் சந்திக்கலாம்.

9. லக்னத்தில் கேது இருந்தால்:

தனிமையை அதிகம் விரும்புவார்கள். கூட்டத்தில் இருந்தாலும் தனியாகத்தான் இருக்க விரும்புவார்கள். கோவில், அமைதியான இடம் என்றால் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. யார் என்ன நினைப்பார்கள் என்று அவ்வளவு எளிதில் கவலை கொள்ள மாட்டார்கள்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US