2026 மார்ச் 6 நடக்கும் சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது?
ஜோதிடத்தில் சனிபகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் நம்முடைய கணக்கு வழக்குகளை சரியாக தீர்ப்பவர். அதாவது பாவ புண்ணியம் எது செய்திருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் இரட்டிப்பு பலன்களை நமக்கு கொடுத்து அருள் பவர்.
அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7.56 மணி அளவில் பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் மீன ராசியில் வாக்கிய கணித ரீதியாக சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
அவர் அங்கு 24. 4. 2028 சஞ்சாரம் செய்கிறார். இந்த பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை சேர்க்க போகிறது. அவர்கள் எந்த ராசியில் நின்று பார்ப்போம்.

மீனம்:
மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. இதனால் உடல் நலத்தில் கவனம் தேவை. தேவை இல்லாத அலைச்சல் உண்டாக்கும். ஆனால் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு பாத சனி நடக்கிறது. அதாவது ஏழரை சனியின் கடைசி கட்டமாக உள்ளது. பணவரவு இருந்தாலும் செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து சென்றால் நல்லது.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு விரைய சனி அதாவது ஏழரை சனி ஆரம்பமாகிறது. இதனால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுப விரயங்கள் ஏற்படலாம். முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் இவர்களும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்கு இவர்களுக்கு சுகஸ்தானத்தில் சனி இருப்பதால் தாயாரின் உடல் நிலையில் மிகுந்து கவனமாக இருக்க வேண்டும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்கு கண்டக சனி விலகுகிறது. அதனால் திருமண தடைகள் யாவும் விலகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.

துலாம்:
துலாம் ராசி ருண சத்ரு ஸ்தானம் நடக்கிறது. அதனால் சனி பெயர்ச்சியால் இவர்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும். கடன் பிரச்சனைகள் குறையும்.
கடகம்:
கடக ராசிக்கு பாக்கிய சனி நடைபெறுகிறது. இது இவர்களுக்கு மிகுந்த சாதகமான பலன்களை கொடுக்கும். தந்தை வழி உறவுகளால் நல்ல ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மகரம்:
மகர ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை கொடுக்கபோகிறது. சகோதர வழியில் நன்மைகள் உண்டாகும். இவர்கள் நினைத்த காரியம் நடக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம் வலுப்பெறும். பதவி உயர்வு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |