2026: துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரக நகர்வுகள் தான் நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை உண்டு செய்கிறது. அப்படியாக மே மாதம் கிரகங்களின் மாற்றம் துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் பணவரவில் எந்த தடையும் இல்லாமல் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்கக்கூடிய மாதமாக இருக்க போகிறது. இருந்தாலும் இவர்களுக்கு வம்பு வழக்கில் சிக்கும் நிலை இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மே 15ஆம் தேதி வரை அவர்கள் வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத சண்டைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
அதன் பிறகு மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உருவாகும். இருப்பினும் பணத்தை தேவையில்லாத இடங்களில் கொடுத்து தொலைக்கக் கூடிய அமைப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். மே மாதம் கோபத்தை குறைத்துக் கொண்டு ஞானிகள் மற்றும் சித்தர்களுடைய சமாதி சென்று வழிபாடு செய்வது மன அழுத்தத்திலிருந்து காக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாதம் தொழிலில் சிறந்து விளங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகிறது.. இருந்தாலும் வாழ்க்கை துணையுடன் ஒரு நல்ல புரிதலோடு விட்டுக் கொடுத்து செல்வது அவசியமாகவும் உள்ளது. இவர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் வாங்கிய கடன்களில் இருந்து விடுபட போகிறார்கள்.
அதைவிட முக்கியமாக ஜூன் மாதம் நடக்க இருக்கக்கூடிய குரு பெயர்ச்சி இவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி கூட்டிச் செல்ல போகிறது. இந்த காலகட்டங்களில் தேவை இல்லாமல் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதற்கு சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்றுவீர்கள். மே மாதத்தில் பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |