தங்கத்தேரில் ஏழுமலையான்.. திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற வசந்த உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு ஊர்கள் நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். அப்படியாக, திருப்பதியில் வருடாந்திர வசந்த உற்சவம் மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.
பங்குனி மாதத்தில் வரும் திரயோதசி, சதுர்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த உற்சவம் சிறப்பாக வழிபாடு செய்யப்படும். அந்த வகையில் நேற்றைய தினம் திருப்பதியில் வசந்த உற்சவம் தொடங்கியது.
அதனை அடுத்து இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற தங்க தேரோட்டத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்க தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து உற்சவர்களுக்கு தீப தூப நெய்வேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. இதனை அடுத்து பெண் பக்தர்கள் ஸ்ரீவாரி சேவா தன் ஆர்வலர்கள் ஆகியோர் வடம் பிடிக்க கோவிந்த கோஷம் விண்ணதிர கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி காண்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |