2026: தை மாதம் வர இருக்கும் ஆபத்து..பொருளாதாரக் கஷ்டத்தை சந்திக்கும் ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்கள் எப்பொழுதும் அவர்களுடைய மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள். அப்படியாக ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய காலங்களில் அந்த தாக்கம் 12 ராசிகளுக்கும் சென்றடையும். அந்த வகையில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் சூரிய பகவான் நுழைய இருக்கிறார்.
இதுவே மகர சங்கராந்தி தினம் என்று அழைக்கப்படுகிறது. நடக்கின்ற சூரியனுடைய பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்ய போகிறது. ஒரு சிலருக்கு இந்த பெயர்ச்சி அவர்களுடைய ஜாதக அமைப்பின் காரணமாக நல்ல பலன்களை கொடுத்தாலும், பொதுவான ஜோதிட ரீதியாக தீய விளைவுகளை கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

தனுசு:
இவர்களுக்கு இந்த சூரியன் பெயர்ச்சியானது குடும்பத்தில் திடீரென்று வாக்கு வாதம் ஏற்படுவதற்கான நிலையை கொடுக்க போகிறது. நினைத்த பொருட்களை வாங்குவதில் சில தாமதங்களை சந்திக்க போகிறீர்கள். பிள்ளைகள் உடல் நிலையில் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
மிதுனம்:
மிதுன ராசிக்கு சூரியனின் இந்த பெயர்ச்சியால் அவர்கள் மிகவும் கவனமான நிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்கு திடீரென்று வழக்குகள் ரீதியாக ஒரு சில பிரச்சனைகள் வரலாம் அல்லது மன அழுத்தம் காரணமாக உடல் ரீதியாக திடீர் என்று உபாதைகளை சந்திக்ககூடும். மருத்துவ செலவுகள் இவர்கள் சந்திக்கக்கூடிய காலமாக இருப்பதால் கவனம் வேண்டும்.
கடகம்:
கடக ராசியினருக்கு சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சியானது சற்று எதிர்மறையான தாக்கத்தை கொடுக்க இருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அல்லது உடன் பணிபுரிபவர்களிடம் சற்று வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான நிலை இருப்பதால் முடிந்த வரை அலுவலகத்தில் நீங்கள் அமைதியை காப்பதே நன்மை தரும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சூரியனின் இந்த பெயர்ச்சியானது தேவை இல்லாத மன அழுத்தங்களையும் நெருங்கியவர்களிடம் மனக்கசப்புகளையும் கொடுக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் ஒரு நல்ல புரிதல் இல்லாத ஒரு நிலையை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் கூட உங்களுக்கு ஒரு சில கருத்து வேறுபாடுகள் வந்து மன அழுத்தம் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |