கேதுவின் இரட்டை இடமாற்றம்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர்.
இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
கேது பகவான் 2025 ஆம் ஆண்டின் மே மாதம் 18ஆம் திகதி சிம்ம ராசிக்கு மாறவுள்ளார்.
கேது சிம்ம ராசிக்குள் நுழையும் அதே சமயம் உத்திரம் நட்சத்திரத்திற்கும் இடம் பெயரவுள்ளார்.
கேது பகவான் ஒரே வேளையில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றவுள்ளதால், குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்.
மேஷம்
- குடும்பத்தில் உள்ளோரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
- இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும்.
- மாணவர்களுக்கு தேர்வுகளைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும்.
- இந்த அச்சம் மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லும்.
- தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை இழக்கலாம்.
- வயதானவர்களாக இருந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் சந்திக்க நேரிடும்.
தனுசு
- வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்படலாம்.
- உங்கள் துணையின் மௌனம் உங்களை மனதளவில் பெரிதும் பாதிக்கும்.
- இக்காலத்தில் புதிய சொத்தை வாங்கவோ அல்லது எதையும் வாடகைக்கு எடுக்கவோ நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
- வயதானவர்களாக இருந்தால், மிகுந்த மன உளைச்சல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
- பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- தொழிலில் முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், அதை தவிர்க்க வேண்டும்.
- இக்காலத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- வணிகர்கள் நஷ்டத்தைத் தரும் ஒப்பந்தங்களை ஒப்புக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
- மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது.
- மொத்தத்தில் மே மாதம் மோசமாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |