மிக எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடிய 3 ராசிகள்- சின்ன பிரச்சனையும் பெரிதாக்கி பார்ப்பார்களாம்

By Sakthi Raj Sep 21, 2025 10:07 AM GMT
Report

மனிதர்கள் என்றால் உணர்வுகள் நிறைந்தவர்கள். அப்படியாக ஒரு சிலரை நாம் கையாள்வது மிகவும் கடினமாக இருக்கும். அதாவது நாம் ஏதேனும் ஒரு நோக்கத்தில் ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள அதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டு செயல்பட கூடிய தன்மையையும் நாம் காணலாம். அதற்கு அவர்களின் ராசி அமைப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த மூன்று ராசியினர் அதிக அளவில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்று பார்ப்போம்.

நவராத்திரி 2025: கொலு அமைத்து வழிபாடு செய்வதற்கான முக்கியமான நேரம்

நவராத்திரி 2025: கொலு அமைத்து வழிபாடு செய்வதற்கான முக்கியமான நேரம்

கடகம்:

கடக ராசியினர் பொறுத்தவரை அவர்களுடைய அதிபதி சந்திர பகவான். மேலும் சந்திரன்தான் ஒருவர் மனதிற்கு காரணியாக விளங்க கூடியவர். மேலும் சந்திரன் என்பது ஜோதிடத்தில் தாயைக் குறிக்கக்கூடிய கிரகமாகும். ஆதலால் கடக ராசியினருக்கு இயல்பாகவே தாய்மை உணர்வு அதிகம் இருக்கும்.

ஆதலால் எல்லோரிடத்திலும் அன்பாகவும் எல்லோரிடத்திலும் தாயைப்போல் அரவணைத்து அவர்களுக்கு நன்மை தீமை எடுத்துச் சொல்லி வழிநடத்தும் பக்குவம் இவர்களிடம் இருந்தாலும், இவர்கள் எல்லோரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்பது போல் எடுத்துக் கொள்வதால் சமயங்களில் அவர்களுடன் பழகும் நபர்கள் ஏதேனும் ஒரு சிறியதாக ஒரு விஷயம் செய்து விட்டால் கூட அந்த விஷயம் அவர்களை மிகவும் பெரிய அளவில் பாதிக்க செய்கிறது.

துலாம்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியினர் எப்பொழுதும் சம நிலையை கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். பொதுவாகவே துலாம் ராசியினருக்கு அவ்வளவு தீய எண்ணங்கள் இருப்பதை நாம் காண முடியாது.

மேலும் துலாம் ராசியினர் அவர்களைப் போல் எல்லோரும் சமநிலையாகவும் நல்ல எண்ணத்தோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதலால் யாரேனும் இவர்களுக்கு துரோகம் செய்தாலோ அல்லது யாரேனும் பிறருக்கு தீங்கு விளைவித்தாலோ துலாம் ராசியினர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிக அளவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் கோபம் கொள்வதற்கு ஆளாகிறார்கள்.

மீனம்:

மீன ராசியில் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியினர் பொறுத்த வரை எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் திறன் உடையவர்கள். அதேபோல் மீன ராசியினர் வாழ்க்கையில் அதிகபடியான துயரங்களை சந்தித்து பக்குவம் அடைந்திருப்பார்கள். ஆதலால் தன்னுடைய துன்பத்தை பிறரிடம் எடுத்துச் சொல்லி அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று வழிநடத்தும் திறன் இவர்களிடம் இருக்கும்.

அதே சமயம் மீன ராசியினர் இவர்களைப் போல் இவர்களுடன் பழகுபவர்கள் நேர்மையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சமயங்களில் மீன ராசியினர் சொல்வதை செய்யக்கூடிய எதிர்பார்ப்பு உடையவர்கள். யாரேனும் இவர்கள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு செய்யாமல் சென்றார்கள் என்றால் அது இவர்களின் மிகப்பெரிய அளவில் பாதிக்க செய்து உணர்ச்சி வசப்பட வைத்து கோபத்தை தூண்டுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US