நவராத்திரி 2025: கொலு அமைத்து வழிபாடு செய்வதற்கான முக்கியமான நேரம்
நவராத்திரி என்பது அம்பிகையை வழிபாடு செய்வதற்கான மிக உகந்த நாளாகும். அதாவது நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். மேலும், 9 நாட்களும் அம்பிகையை ஒவ்வொரு வடிவில் நாம் வழிபாடு செய்து அம்பிகையின் அருளை பெறுவதற்காக கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.
இந்த நவராத்திரி பண்டிகையின் பொழுது விரதமிருந்து அம்பிகையை மனதார வழிபாடு செய்பவர்களுக்கு குடும்பத்திலும் அவர்கள் வாழ்க்கையிலும் சந்திக்கின்ற தீமைகள் அனைத்தும் விலகி அவர்கள் வாழ்க்கையில் நன்மைகள் அம்பிகையின் அருளால் முன்னேற்றம் கிடைப்பதையும் நாம் பார்க்க முடியும்.
அப்படியாக இந்த ஆண்டு நவராத்திரி 22 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 01 ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 02 ஆம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படும். மேலும் நவராத்திரி வழிபாட்டினை நான்கு விதமாக மேற்கொள்ளலாம். ஒன்று கொலு அமைத்து கலசம் அமைத்து படம் வைத்து அகண்ட தீபம் ஏற்றி என நான்கு முறையாக நாம் இந்த நவராத்திரி வழிபாடுகளை மேற்கொண்டு அம்பிகையின் அருளை பெறலாம்.
மேலும் நவராத்திரி விழாவிற்கு கொலு வைத்து கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரிக்கு முந்தைய நாளான மகாளய அமாவாசை அன்று கொலு பொம்மைகளை அடுக்கத் தொடங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நல்ல நேரம் நாள் பார்த்து நவராத்திரிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த கொலு படிக்கட்டுகளை அமைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் இன்றைய நாள் செப்டம்பர் 21 ஆம் தேதி கொலு படிக்கட்டுகள் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 11. 50 மணி வரையில் உள்ள கொலு பொம்மைகள் அடக்கி அவர்களுடைய வழிபாட்டை தொடங்கலாம் அல்லது நவராத்திரி தினம் என்று அதாவது செப்டம்பர் 22ம் தேதி கொலு படிக்கட்டுகள் அமைந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அல்லது காலை 9. 10 மணி முதல் காலை 10.20 மணி வரை ஆகிய நேரங்களில் கொலு பொம்மைகளை அடக்கி வழிபாட்டுகளை துவங்கலாம். இந்த நேரத்தில் வழிபாடு முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேலும் அவர்கள் வழிபாட்டை செய்து அம்பிகையின் அருளை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







