2025 நாளை சூரிய கிரகணம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

By Sakthi Raj Sep 20, 2025 08:33 AM GMT
Report

 இந்த 2025 ஆம் ஆண்டு பொறுத்தவரையில் நான்கு கிரகணங்கள் நிகழும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இரண்டு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணம் என்று சொல்லுகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஒரு சூரிய கிரகணமும் இரண்டு சந்திரன் கிரகணமும் நிகழ்ந்துள்ள நிலையில் கடைசியாக இந்த மாதம் ஏழாம் தேதி தான் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளில் அதாவது நாளை செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நாள் சர்வ பித்ரு அமாவாசை நாள் ஆகும்.

2025 நாளை சூரிய கிரகணம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? | 2025 Sept21 Things We Shouldnt Do On Solar Eclipse

அதோடு மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், செப்டம்பர் 21 தேதி சூரிய கிரகணம் இரவு சுமார் 11 அதிகாலை 3:23 வரை நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இரவு ஏற்படுகிறது என்பதால் இவை இந்தியாவில் நம்மால் காண முடியாது. மேலும் இந்த சூரிய கிரகணம் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு சில ஆபத்துக்களை விளைவிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட ஒரு தகவலாகும். மேலும் சூரிய கிரகணத்தின் பொழுது அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியது கண்கள் என்றும் சொல்கிறார்கள்.

2025 மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு வீடுகளில் எளிமையான முறைகளில் பூஜை செய்வது எப்படி?

2025 மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு வீடுகளில் எளிமையான முறைகளில் பூஜை செய்வது எப்படி?

அதோடு சூரிய கிரகணத்தின் பொழுது வீடுகளை விட்டு வெளியில் அவசியமில்லாமல் செல்வதை தவிர்ப்பதும் நன்மை அளிக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயமாக சூரிய கிரகணத்தின் பொழுது வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பது அவர்களுக்கும் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பாக அமையும்.

காரணம் சூரிய கிரகணத்தின் பொழுது வரக்கூடிய கதிர்வீச்சுகள் கருவில் இருக்கும் குழந்தையை ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படும் என்பதால் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US