2025 மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு வீடுகளில் எளிமையான முறைகளில் பூஜை செய்வது எப்படி?
மகாளய அமாவாசை என்பது நம்முடைய வீடுகளில் இறந்த முன்னோர்களுக்காக கொடுக்கக்கூடிய தர்பணமாகும். பொதுவாக இந்த வழிபாடுகளை நாம் புனித நீர்கள் குளம் கடல் ஆகியவற்றின் அருகில் செய்வது வழக்கம்.
இவ்வாறான இடங்களுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீடுகளில் எளிமையான முறைகளில் பித்ரு வழிபாடு மேற்கொள்ளலாம். அப்படியாக மகாளய அம்மாவாசை அன்று வீடுகளில் பித்ரு பூஜை செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
புரட்டாசி மாதம் அமாவாசை முன்னோர்கள் வழிபாடு செய்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவதற்கான மிகச் சிறந்த தினமாக இருக்கிறது. எல்லா மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகவும் விசேஷம் என்றாலும் புரட்டாசி மாதத்தில் தான் அமாவாசைக்கு முன்பு வரும் 15 நாட்கள் தினமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து ஆசீர்வாதத்தை பெறக்கூடிய அற்புத காலமாக இருக்கிறது.
இந்த நாட்களை பயன்படுத்தி நாம் முன்னோர்களை வழிபாடு செய்தால் நமக்கு ஏற்பட்ட பித்ரு தோஷம் அல்லது குடும்பங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் முன்னோர்களின் ஆசிர்வாதித்தால் விலகும்.
வீடுகளில் எளிமையான முறையில் வழிபாடு செய்யும் முறை:
வீடுகளில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு ஒரு நிமிடம் மனதார முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஒரு தாம்பூலம் எடுத்துக் கொண்டு அதன் மேல் வலது கை, கட்டை விரல், ஆள்காட்டி விரலுக்கு நடுவில் சிறிது கருப்பு எள் வைத்து நீர் ஊற்றி முன்னோர்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி மூன்று முறை நீர் விட வேண்டும்.
பிறகு அந்த நீரை யாரும் கால்படாத இடங்களில் ஊற்றி விட வேண்டும். அதாவது ஆறு, குளம், ஏரி, கிணறு போன்ற நிலைகளில் இந்த நீரை ஊற்றலாம். இந்த பூஜை செய்யும் பொழுது தெற்கு பார்த்தவாறு முன்னோர்கள் படத்தை வைத்து ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
பிறகு அவர்களின் படத்திற்கு துளசி மாலை அணிவித்து சாம்பிராணி தூபம் போட வேண்டும். அதோடு சேர்த்து சொம்பு நிறைய நீர் வெற்றிலை பாக்கு, 2 வாழைப்பழம், மல்லிகை பூ சிறிதளவு வைக்க வேண்டும். முன்னோரக்ளுக்கு படையல் போட்டு வழிபாடு செய்பவர்கள் கட்டாயம் வாழைக்காய் பொரியல், உளுந்து வடை கண்டிப்பாக வைக்க வேண்டும்.
அதோடு சாதத்தில் சிறிது தயிர், கருப்பு எள் கலந்து காக்கைக்கு கிழக்கு திசை பார்த்து உணவு வைக்க வேண்டும். கூடுதலாக பசுவிற்கு அகத்திகீரை மற்றும் வாழைப்பழம் கொடுப்பது, தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது, அன்னதானம் போன்ற செயல்களில் ஈடுபடுவது சிறந்த பலன் அளிக்கும்.
இறுதியாக மாலை 6 மணிக்கு மேல்ஏதெனும் கோயிலுக்கு சென்று ஒரு நல்லெண்ணெய் தீபம் முன்னோர்களுக்காக ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







