இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இருக்குமாம்
ஜோதிடத்தில் ஒரு சிலர் ராசிக்கு வாழ்க்கையில் எதிர்காலங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னதாகவே கணிக்க கூடிய ஒரு ஆற்றல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இவர்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அப்படியாக, எந்த ராசியினருக்கு பிறவியிலே எதிர்காலத்தை கணிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மீனம்:
குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற இவர்களுக்கு எப்பொழுதுமே எதிர்காலத்தை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் இவர்களுடைய கணிப்பு எப்பொழுதும் தவறுவதில்லை.
இவர்கள் ஒருவரிடம் இதை செய்யாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை உணர்ந்து இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தனுசு:
தனுசு ராசியினரும் குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்றிருப்பதால் இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவர்களுக்கு தற்பொழுது என்ன நடக்கிறது.
பிற்காலங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்கள் யூகித்து வைக்கக்கூடிய ஒரு தன்மையை பெற்று இருக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் இவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. சொன்னால் தவறாக முடிந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர்கள் அமைதி காத்து விடுகிறார்கள்.
விருச்சிகம்:
இவர்களுக்கு பிறவியிலேயே ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும். அதனால் இவர்கள் எதிர்காலங்களில் வாழ்க்கை எப்படி செல்ல போகிறது என்பதை இவர்கள் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் பெரும்பாலும் விருச்சிக ராசியினர் சொல்லக்கூடிய கருத்துக்களும் அவர்கள் ஒருவருக்கு கொடுக்கக்கூடிய ஆலோசனையும் மிகச் சிறந்ததாக அமைவதை நாம் பல நேரங்களில் பார்க்கலாம்.