வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 4 அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நமது வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் நடக்க போகிறது என்றால் சில அறிகுறிகள் மூலம் அறியலாம்.
குறிப்பாக, வீட்டில் துர்நாற்றம் வீசுவது, விலங்குகள் விசித்திரமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் கெட்ட காலம் வரப்போவதற்கான அறிகுறிகளாக கருதலாம்.
அந்தவகையில், நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கியதை கண்டுபிடிப்பதற்கான வீட்டில் நிகழும் சில அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
1. துளசி
இந்து மதத்தில் புனிதமாக கருதப்படும் துளசி லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாக பார்க்கப்பட்டுகிறது.
துளசி செடியை வீட்டில் பசுமையாக வைப்பதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அப்படி புண்ணியமாக பார்க்கப்படும் துளசி செடி அடிக்கடி வாடினால் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் அதிகரிக்கும்.
2. கண்ணாடி
வீட்டில் உள்ள கண்ணாடி அடிக்கடி உடைந்தால் ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்கள் அல்லது பீங்கான் ஆகியவை அடிக்கடி வீட்டில் உடைந்தால் ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம்.
அதேபோல் இவ்வாறு உடைந்த கண்ணாடித் துண்டுகள் அல்லது பாத்திரங்களை வீட்டில் வைக்கக் கூடாது.
3. தங்கம்
வீட்டில் வைக்கும் தங்கம் நீண்ட நாட்களாக காணாமல் போனால் அது துரதிர்ஷ்டத்திற்கான அறிகுறி.
இது போன்ற சம்பவங்கள் நடந்தால் வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கலாம்.
மேலும், இது ஜோதிட சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள மகாலட்சுமியின் கோபத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
4. பூனை
பொதுவாக, வேதங்களில் பூனையின் அழுகை அசுபமாக பார்க்கப்படுகிறது.
பூனையின் அழுகை சத்தம் கேட்கும் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்காது என்பது ஐதீகம். இது வாழ்க்கையில் சில கெட்ட விடயங்கள் நிகழ்வதற்கான ஒரு அறிகுறியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







