ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது.
இத்திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் மிக முக்கிய திருத்தலமாக இது போற்றப்படுகிறது.
சூடி கொடுத்த சுடர்க்கொடி என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆண்டாள் நாச்சியார், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஆண்டாள்-ரெங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் கடந்த 24ஆம் திகதி அன்று 5 கருட சேவை நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோயிலிலிருந்து சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.
தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.10 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
கோவிந்தா, கோபாலா என்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







