சாணக்கிய நீதி: ஆண்கள் தவறியும் செய்யக்கூடாத 5 விஷயங்கள்
சாணக்கியர் இந்தியாவில் மிக சிறந்த தத்துவ ஞானியாக இருக்கின்றார். இவர் ஒருவர் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று பல அறிவுரைகள் வழங்கியுள்ளார். அந்த வகையில் சாணக்கியர் ஆண்களுக்கு சில வாழ்க்கையை பற்றிய அறிவுரைகள் சொல்லியிருக்கிறார்.
அதில் அவர்கள் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள் சிலவற்றையும், அதை செய்தால் வாழ்க்கையில் உருவாகும் கஷ்டங்களை பற்றியும் சொல்லுகிறார். அதைப் பற்றி பார்ப்போம்.
1. ஒவ்வொருவர் குடும்பத்திலும் பெண்கள் தூண் போன்றவர்கள். அதனால், நாம் ஒரு பொழுதும் பெண்களை அவமரியாதை செய்து நடத்துவதுக் கூடாது.
எந்த ஒரு ஆண் அவன் வீட்டில் உள்ள பெண்களை அவமரியாதை செய்தும், அவமானம் செய்தும் நடத்துகின்றாரோ அவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது மிகவும் கடினமாகி விடும். இது அவர்கள் வீட்டில் பொருளாதார வீழ்ச்சியையும் கொடுத்து விடும் என்கிறார்.
2. கோபம் மனிதனுக்கு ஒரு முக்கியமான எதிரி. ஆகையால் ஆண்கள் ஒரு பொழுதும் கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்கிறார். கோபத்தின் பொழுது எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறான பாதைக்கே வழிவகுக்கிறது.
அதேப்போல், குடும்பத்திற்குள் எந்த ஒரு ஆண் அதிக கோபத்துடனும் அகங்காரத்துடனும் நடந்துக் கொள்கிறாரோ அவர்கள் வீட்டில் நிம்மதி இழந்து காணப்படுகிறார்கள்.
3. எந்த ஒரு ஆண் தேவை இல்லாமல் ஆடம்பரத்தில் இறங்குகின்றாரோ அவர்கள் வீட்டில் விரைவில் நிதி இழப்புகள் கடன் சுமை உண்டாகுவதை காணலாம்.
சில ஆண்கள் முன் யோசனை இல்லாமல் பணத்தை தொழிலில் முதலீடு செய்து அனைத்தையும் இழக்கும் நிலை உருவாகுவதை பார்க்கலாம். ஆக, பணத்தை சிக்கனமாகவும், அடுத்தவர் முன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று கடன் வாங்கியும் செய்வது கூடாது என்கிறார்.
4. ஆண்கள் எப்பொழுதும் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அல்லது அவர் வாழ்க்கையில் சந்தித்த அவமானங்களை வெளியில் சொல்லக்கூடாது.
அவ்வாறு சொல்லும் ரகசியம் எதிர்காலத்தில் அவர்களுக்கே தீய விளைவுகளை உருவாக்கும் நிலை கொடுத்து விடலாம். இன்னும் முக்கியமாக தொழில் ரகசியத்தை கட்டாயமாக வெளியே சொல்லக்கூடாது. அது அவர்களுக்கு பெரும் ஆபத்தை உண்டு செய்து விடும்.
5. எப்பொழுதும் ஒரு ஆண் தான் சம்பாதிப்பதை கர்வமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது அவர்களுக்கு பின்விளைவுகளைக் கொடுத்து விடும்.
அதாவது மனிதனுக்கு ஒழுக்கமும் அடக்கமும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆதலால், எந்த வீட்டில் ஆண் மிகவும் கர்வத்தோடு இருக்கின்றாரோ அவர்கள் வீட்டில் விரைவில் சில பொருளாதார சரிவுகள் சந்திப்பதை பார்க்கலாம். ஆதலால் கர்வம் இல்லாமல் வாழ ஒருவர் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







