நாகபஞ்சமி 2025: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
இந்து மதத்தில் நாகபஞ்சமி நாக கடவுள்களை வழிபாடு செய்யக்கூடிய முக்கியமான நாள் ஆகும். மேலும், இன்றைய நாளில் ஜோதிடசாஸ்திரப்படி நாக பஞ்சமி அன்று மிகவும் மங்களகரமான யோகமும் உருவாகிறது. அதோடு, சிவபெருமானின் அருளைப் பெற இன்று மிகவும் மங்களகரமான நாளாகும்.
இதுமட்டுமின்றி, நாக பஞ்சமி தினத்தன்று சுக்ல யோகமும் உருவாகி வருவதால், பல ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக அமையும். அப்படியாக, இன்றைய நாளில் வாழ்க்கையில் சிறந்த மாற்றமும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ நாக பஞ்சமி நாள் மிகவும் அற்புதமான நாளாக அமையப் போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றமும் பாராட்டுக்களும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்கள் நல்ல முடிவைப் பெரும். சிலருக்கு பதவி மற்றும் சம்பள உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் உள்ள குழப்பங்கள் விலகும்.
தனுசு:
நாக பஞ்சமி நாளில் தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த நாளாக அமையப் போகிறது. இன்று இவர்கள் குடும்பத்தில் நற்செய்தி தேடி வரும். தொழில் செய்த முதலீட்டுக்கு ஏற்ற லாபம் பெறுவீர்கள். மனதில் உள்ள கவலைகள் விலகி தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி செல்லும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளில் பண பொழியும் நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உருவான சிக்கல் விலகி செல்லும். பிள்ளைகளால் மனம் மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நினைத்த வருமானம் கைகளுக்கு வரும். முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளில் செல்வம் பெருகும். இன்றைய நாளில் நீண்ட நாட்களாக திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். இறைவழிபாட்டிற்கு உரிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







