பெண்கள் கைகளில் வளையல் அணியும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
பொதுவாக வளையல் என்றால் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவை. வளையல்கள் பல வண்ணங்களிலும், வித்யாசமான ரகங்களிலும் இருக்கிறது. அப்படியாக, பெண்கள் கைகளில் அணியும் வளையல்களுக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக விசேஷங்களும், வளையல் அணியும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவைப் பற்றியும் பார்ப்போம்.
இந்து மத சாஸ்திரப்படி திருமணம் ஆன பெண்கள் கட்டாயம் கைகளில் வளையல் அணிந்து இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.மேலும், பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதாவது, வளையல் அணியும் பொழுது மணிக்கட்டுக்கு கீழே இருக்கும் பகுதியில் இருப்பதால் வர்ம புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் உடலிற்கு ஆரோக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள். அதேப்போல், நாம் அணியும் வளையல்களின் நிறங்கள், எண்ணிக்கை இவைகள் பொருத்தும் நமக்கு பலன்கள் மாறுபடுகிறது.
இதில் குறிப்பாக பெண்கள் கண்ணாடி வளையல் அணியும் பொழுது அவர்களுக்கு மங்களகரமான சூழலை உருவாக்கிறது. கண்ணாடி வளையல் அணியும் பொழுது அவர்களை எதிர்மறை ஆற்றல் சூழ்வது இல்லை என்கிறது சாஸ்திரங்கள்.
வளையல் நிறங்களும் பலன்களும் :
பச்சை நிற வளையல் - முகத்தில் லட்சுமி கடாட்சமும், வாழ்க்கையில் அமைதியும் உண்டாகும்.
சிவப்பு நிற வளையல் - மனதில் உள்சக்தி அதிகரிப்பதோடு, கண் திருஷ்டி தொல்லை விலகுகிறது.
ரோஸ் நிற வளையல் - வாழ்க்கையில் எடுக்கும் காரியங்கள் மிக எளிதான முடிவைப் பெரும்.
மஞ்சள் நிற வளையல் - நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
பழுப்பு நிற வளையல் - எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
வெளிர் நீல நிற வளையல் - உடல் உஷ்ண பாதிப்புகள் குறையும்.
வெள்ளை நிற வளையல் - அன்பும், பாசமும் நிறைந்திருக்கும்.
மேலும், பெண்கள் கருப்பு நிற வளையல்கள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதே சமயம் மரம், பிளாஸ்டிக், இரும்பு, ரப்பர் போன்றவற்றால் ஆன வளையல்களை அணியக் கூடாது. பெண்கள் வளையல் வாங்க செல்லும் பொழுதும் வளையல் வாங்குவதற்கான குறிப்பிட்ட சில முக்கியமான நாட்களில் சென்று வாங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதாவது வளையல்களை செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமையில் தவிர்த்து பிற நாட்களில் வாங்கலாம். அதேப்போல் புதிய வளையல்களை அணியும் போது உச்சிப் பொழுது மற்றும் இரவு நேரங்களில் அணிவதை தவிர்க்க வேண்டும்.
வளையல் எண்ணிக்கையும் பலன்களும் :
இரண்டு வளையல் - குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
மூன்று வளையல் - சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
நான்கு வளையல் - எப்பொழுதும் அணியக் கூடாது.
ஐந்து வளையல் - பணப் பிரச்சனை தீரும்
ஆறு வளையல் - வசதி வாய்ப்புகளுக்கு குறை வராது
பெண்கள் எப்பொழுதும் கைகளில் வளையல் அணிந்து இருப்பது நன்மை தரும். அதிலும் குறிப்பாக உணவு பரிமாறும் பொழுதும், வீடுகளில் விளக்கு ஏற்றும் பொழுதும், ஒருவருக்கு காசு கொடுக்கும் பொழுது, போன்ற சமயங்களில் கட்டாயம் வளையல்கள் அணிந்து இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







