வீடுகளில் பின்பற்ற வேண்டிய முக்கியமான எளிய 3 ஆன்மீக குறிப்புகள்
இந்து மாதத்தில் நாம் வீடுகளில் பூஜை அறைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருவோம். அந்த வகையில் நாம் வீடுகளில் பின்பற்ற வேண்டிய எளிய 3 ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
1.நம்முடைய வீடுகளில் ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசலின் கதவுகளில் அல்லது வாசலின் நேர் எதிரோ ஒட்டி வைப்பது சிறந்த பலன் அளிக்கும். அதாவது அவை நம் வீடுகளின் பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் வழி வகுக்கிறது.
மேலும், நம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் அதை நம் கைகளில் வைத்துக் கொள்ளலாம். செல்லும் காரியங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும்.
2. நம் வீடுகளில் கட்டாயம் மாலை வேளையில் விளக்கு மற்றும் ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்வது உண்டு. அவ்வாறு நாம் ஏற்றும் ஊதுபத்தி நீண்ட நேரம் நல்ல வாசத்தோடு எரிய, ஊதுபத்தியில் நெருப்பு வைக்கும் இடத்தை தாண்டி மாற்ற இடங்களில் தண்ணீரில் நினைத்து விட்டு அதன் பின்பு ஊதுபத்தி ஏற்றி வைத்தால் அவை நீண்ட நேரத்திற்கு எரியும்.
3. நாம் கட்டாயம் வாரம் ஒரு முறை சுவாமி படங்களை சுத்தம் செய்யவதுண்டு. அவ்வாறு சுவாமி படங்களை தண்ணீர் தொட்டு துடைக்கும் பொழுது தண்ணீரில் கற்பூரம் நசுக்கி போட்டு, பிறகு அந்த தண்ணீரை வைத்து தொட்டு தொடைத்து வந்தால் சுவாமி படங்களில் அவ்வளவு எளிதாக பூச்சிகள் அரிக்காமல் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







